4ஜி VoLTE ஆதரவுடன் ஸ்வைப் எலைட் பவர் ஸ்மார்ட்போன் மாடலை ஸ்வைப் அறிமுகம் செய்துள்ளது. வருகின்ற வியாழன் முதல் ஃபிளிப்கார்ட் வழியாக விற்பனை செய்யப்பட உள்ளது. எலைட் பவர் விலை ரூ.6999 ஆகும்.
ஸ்வைப் எலைட் பவர்
ஸ்வைப் எலைட் பவர் ஸ்மார்ட்போனில் 5.5 அங்குல ஹெச்டி (720×1280 pixels) திரையுடன் 1.1GHz உடன் ஸ்னாப்ட்ராகன் 210 (MSM8909) உடன் இணைந்த 2 ஜிபி ரேம் பெற்று 16ஜிபி வரையிலான உள்ளடங்கிய சேமிப்பு திறனை கொண்டுள்ளது. மேலும் சேமிப்பினை அதிகரிக்க 32ஜிபி வரையிலான மைக்ரோ எஸ்டி கார்டினை பொருத்திக்கொள்ளலாம்.
பின்புறத்தில் 8 மெகாபிக்சல் கேமரா ஆப்ஷனுடன் எல்இடி ஃபிளாஷ் பெற்று முன்புறத்தில் 5 மெகாபிக்சல் கேமரா இடம்பெற்றுள்ளது. மேலும் 4000எம்ஏஎச் பேட்டரி திறன் செயல்படுகின்ற எலைட் பவர் கருவியின் எடை 147 கிராம் ஆகும். இரட்டை சிம் ஆதரவு , 4ஜி, எல்டிஇ, ஜிபிஆர்எஸ் / எட்ஜ், ப்ளூடூத் வி4.1, வைஃபை, ஜிபிஎஸ், யூஎஸ்பி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்றவை துனை விருப்பங்களாக கிடைக்கின்றது.
ஸ்வைப் எலைட் பவர் 4ஜி VoLTE விலை ரூ.6,999