ரூ.6,699க்கு டெக்னோ கேமான் iACE2 மற்றும் iACE2X மொபைல்கள் விற்பனைக்கு வந்தது

சீனாவைச் சேர்ந்த டிரான்ஷன் ஹோல்டிங்ஸ் நிறுவனம், டெக்னோ கேமான் iACE2 மற்றும் iACE2X இரு ஸ்மாஃட்போன் மாடல்களை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. பட்ஜெட் விலையில் கிடைக்கின்ற இந்த மொபைல்கள் ஆஃப்லைன் மூலம் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

பட்ஜெட் விலையில் பல்வேறு வசதிகளை பெற்றதாக வந்துள்ள டெக்னோ மொபைல்களில் குறிப்பாக கைரேகை சென்சார் மற்றும் 3,050mAh பேட்டரி திறனுடன் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ அடிப்படையிலான ஹைஒஎஸ் பெற்றதாக உள்ளது.

இரு மாடல்களிலும் பொதுவாக சில வசதிகளை பெற்றுள்ளது. டெக்னோ கேமான் ஐஏஸ்2 மற்றும் ஐஏஸ்2எக்ஸ் என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன்களில் 5.5 அங்குல ஹெச்டி பிளஸ் திரையுடன், 1440×720 பிக்சல் தீர்மானத்தை கொண்டு 18:9 திரை விகிதம் பெற்று 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இரு மொபைல்களை இயக்க மீடியாடெக் ஹீலியோ A22 சிப்செட் கொண்டு 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்க மெமரி (கேமான் iACE2 வேரியன்டில் 2ஜிபி ரேம்) கொண்டிருக்கின்றது.

கேமரா பிரிவில் டுயல் செட்டப் கேமரா பெற்று 13 எம்பி பிரைமரி கேமரா மற்றும்  0.3 எம்பி செகன்ட்ரி கேமரா சென்சார் வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 8 எம்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இரு ஸ்மார்ட்போன்களில் ஃபேஸ் அன்லாக் வசதி,  டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி அட்டை ஸ்லாட், டூயல் 4ஜி VOLTE மற்றும் 3050 Mah பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

கோல்டு , பிளாக் மற்றும் புளூ என மூன்று நிறங்களில் கிடைக்க உள்ள டெக்னோ கேமான் iACE2 விலை ரூ.6,699 மற்றும் iACE2X ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,599 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.