டெக்னோ கேமான் ஐஸ்கை 3

டெக்னோ மொபைல்ஸ் நிறுவனத்தின், டெக்னோ கேமான் ஐஸ்கை 3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூபாய் 8,599 விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. டூயல் கேமரா சென்சாரை பெற்ற விலை குறைந்த மாடலாக கேமான் விளங்குகின்றது.

பல்வேறு அம்சங்களில் மிக முக்கியமாக இந்த போனில் மல்டி ஆப் பயன்பாடு, நேவிகேஷன் சார்ந்த வசதிகள் மற்றும் டிஜிட்டல் சார்ந்த மேம்பாடுகளை கொண்டுள்ளது.

டெக்னோ கேமான் ஐஸ்கை 3 சிறப்புகள்

ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தின் அடிப்படையில் ஹைஓஎஸ் கொண்டு செயல்படும் இந்த போனில் 6.2 அங்குல ஹெச்டி திரையுடன் கூடிய 19:9 ஆஸ்பெக்ட் விகிதம் கொண்டு 2GHz குவாட் கோர் மீடியாடெக் ஹீலியோ A22 பிராசெஸருடன் கூடிய 2GB ரேம், மற்றும்  32GB சேமிப்பு வசதி கொண்டதாக விளங்குகின்றது.

செயற்கை அறிவுத்திறன் கொண்ட 13 எம்பி சென்சார் மற்றும் 2 எம்பி சென்சாருடன் கூடிய கேமான் ஐஸ்கை 3 போனில் செல்ஃபி பிரிவில் 8MP முன்பக்க கேமரா பெற்றுள்ளது. இந்த செல்ஃபி கேமராவில் வழங்கப்பட்டுள்ள முகத்தின் 228 புள்ளிகளை கொண்டு 6 வகையில் ஏஐ மூலம் கண்டறிந்து சிறப்பான படங்களை பெற வழி வகுக்கின்றது.

3500mAh பேட்டரி கொண்ட இந்த போனில் ஃபேஸ் அன்லாக் , கைரேகை சென்சார் மற்றும் பல்வேறு வசதிகளை கொண்டதாக வந்துள்ளது.

TECNO CAMON iSKY 3 specifications

 • 6.2-inch (1520 x 720 pixels) HD+ 19:9 2.5D வளைந்த டிஸ்பிளே
 • 2GHz குவாட் கோர் மீடியாடெக் ஹீலியோ A22 12nm பிராசெஸருடன் IMG PowerVR GE-class GPU
 • 2GB ரேம், 32GB சேமிப்பு வசதி
 • 256GB மைக்ரோ எஸ்டி அட்டை ஸ்லாட்
 • ஆண்ட்ராய்டு 9.0 (பை) அடிப்படையில் HiOS 4.6
 • டூயல் சிம் (nano + nano)
 • 13MP கேமராவுடன் எல்இடி ஃபிளாஷ், f/1.8 , 2MP செகன்டரி கேமரா
 • 8MP முன்பக்க கேமரா f/2.0
 • 3.5mm ஆடியோ ஜாக்
 • டூயல் 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, ப்ளூடூத் 4.2, GPS + GLONASS
 • 3500mAh பேட்டரி