குவாட் கேமராவுடன் டெக்னோ போவா விற்பனைக்கு வெளியானது

டெக்னோ ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர், ரூ.9,999 விலையில் புதிய போவா (Tecno POVA) மாடலை குவாட் கேமரா செட்டப் பெற்றதாக 6000mAh பேட்டரியுடன் 18 வாட்ஸ் விரைவு சார்ஜருடன் அறிமுகம் செய்துள்ளது.

வரும் 11 ஆம் தேதி முதல் ஃபிளிப்கார்ட் மூலமாக விற்பனை செய்யப்பட உள்ள இந்த மாடலில் 4 ஜிபி மற்றும் 6 ஜிபி என இரு விதமான ரேம் ஆப்ஷனை கொண்டுள்ளது.

டெக்னோ போவா

புதிதாக வந்துள்ள டெக்னோ போவா மொபைலில் 6.8 இன்ச் எச்டி 20.5:9 Dot-in திரையுடன் 1640 x 720 பிக்சல் தீர்மானத்தை கொண்டு மீடியாடெக் Helio G80 சிப்செட் பெற்று 6ஜிபி ரேம், 8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி, 128ஜிபி சேமிப்புடன் கூடுதலாக 256ஜிபி விரிவுப்படுத்தக்கூடிய எஸ்டி கார்டை பயன்படுத்தலாம்.

ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை பின்பற்றி HiOS 7.0 செயல்படுகின்ற மாடலில் குவாட் கேமரா ஆப்ஷன் கொடுக்கப்பட்டு பிரைமரி ஆப்ஷனில் 16 எம்பி, 2 எம்பி மேக்ரோ, 2 எம்பி டெப்த் மற்றும் AI சென்சார் உள்ளது. முன்புறத்தில் 8 எம்பி கேமரா செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு கிடைக்கின்றது.

பின்புறத்தில் கைரேகை சென்சார் பெற்று டூயல் சிம் கார்டு வசதியுடன் 6000mAh பேட்டரியுடன் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜருடன், 4G VoLTE, Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz), ப்ளூடூத் 5, GPS/ GLONASS/ Beidou, மைக்ரோ யூஎஸ்பி ஆகியவற்றை பெற்றுள்ளது.

டெக்னோ போவா மொபைல் பர்பிள், கருப்பு மற்றும் மேஜிக் ப்ளூ வண்ணங்களில் கிடைக்கும்.

Tecno POVA  4GB+64GB – ரூ.9,999

Tecno POVA  6GB+128GB – ரூ.11,999

web title : Tecno POVA smartphone launched in India