உலக மொபைல் போன் வரலாற்றில் மிகச்சிறிய மற்றும் 13 கிராம் எடை மட்டுமே பெற்றுள்ள  ஜாங்கோ டைனி T1 மொபைல் போன் விலை $40 (ரூ.2500) மதிப்பில் விற்பனை செய்யப்பட உள்ளது.

ஜாங்கோ டைனி T1

தற்போது கிக்ஸ்டார்ட்ர் வாயிலாக பிரச்சாரத்தை தொடங்கியுள்ள இந்நிறுவனம், தொடக்கநிலையில் உள்ள இந்த சின்னஞ்சிறிய ஃபீச்சர் போன் தயாரிப்பு நிதி வருகின்ற ஜனவரி 19, 2018 க்குள் $33,480 அமெரிக்கா டாலரை திரட்டும் பட்சத்தில் , மே 2018 முதல் உலகின் அனைத்து நாடுகளிலும் டெலிவரி தொடங்கப்பட உள்ளது.

மிக வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் யுகத்தில் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்தி என்ற பாரம்பரியத்தை கொண்டு கிரெடிட் கார்டு உயரத்தை விட குறைவாக, ஐரோப்பாவின் யூரோ 2 நாணயத்தை விட சற்று தடிமனாகவும் அமைந்துள்ள டைனி டி1 மொபைல் அளவு 46.7x21x12mm மற்றும் எடை 13 கிராம் ஆகும்.

0.49 ஓஎல்இடி காட்சி திரையுடன் 64 x 32 பிக்சல் தீர்மானத்தை கொண்டதாக வந்துள்ள டைனி டி1 மொபைல் போனில் அதிகபட்சமாக 32ஜிபி உள்ளீட்டு சேமிப்புடன், நானோ சிம், புளூடூத், மைக்ரோ யூஎஸ்பி ஆகியவற்றுடன் 2ஜி சிம் கார்டு ஆதரவினை பெற்று அதிகபட்சமாக 300 தொடர்புகள் சேமிக்கவும், 50 எஸ்எம்எஸ் மற்றும் 50 கால் டாக்ஸ் பராமரிக்க உதவி புரிவதுடன், மூன்று நாள் ஸ்டான்ட் பை டைம் பெற்றிருப்பதுடன் 180 நிமிட டாக்டைம் கொண்ட  200mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.