உங்கள் வாட்ஸ்அப் மெசேஜ்கள் மூன்று வகைகளில் ஹாக் செய்யப்படுகிறது: ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

வாட்ஸ்அப்பில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்கும் நோக்கில், சமீபத்தில் வாட்ஸ்அப்-பில் பல்வேறு மாற்றங்களை வாட்ஸ்அப் நிறுவனம் செய்துள்ளது. இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், ஹாக்கர்கள், ஒருவரின் வாட்ஸ்அப் மெசேஜ்-யை ஹாக் செய்யும் ஆபத்து உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் மேலும் தெரிவிக்கையில், உங்கள் வாட்ஸ்அப் மெசேஜ்களை ஹாக் செய்யும் ஹாக்கர்கள், அந்த மெசேஜ்களில், நீங்கள் குறிப்பிடாத சில தகவல்களை பதிவு செய்து பகிரவும் முடியும். இதனால், தவறான தகவல்கள் உங்களுக்கு தெரியாமலே நீங்கள் அனுப்பும் மெசேஜ் மூலம் பரவிவிடும் என்றும் கூறியுள்ளனர்.

உங்கள் வாட்ஸ்அப் மெசேஜ்கள் மூன்று வகைகளில் ஹாக் செய்யப்படுகிறது: ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

குறிப்பாக ஹாக்கர் மூன்று வகைகளில் வாட்ஸ்அப் மெசேஜ்கள் ஹாக் செய்வதாகவும், அவைகளை ஆராய்ச்சியாளர்கள் வகைப்படுத்தியுள்ளனர்.

  • ஹாக்கர்களால் நீங்கள் அனுப்பும் பதில் மெசேஜ்-யை மாற்றி அனுப்ப முடியும். நீங்கள் ஒருவருக்கு நல்ல செய்தியுடன் கூடிய மெசேஜ் ஹாக்கர்களால் மாற்றப்பட்டு தவறான தகவலாக அனுப்பப்படலாம்.
  • வாட்ஸ்அப் குழுவில், நீங்கள் கேட்கும் கேள்வி மற்றும் சந்தேகத்திற்கு ஆகியவற்றுக்கு குழுவில் இடம் பெறாத ஒருவர் பதில் அளித்தால், அது ஹாக்கரின் செயல் என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த பதில் குழுவிலோ அல்லது தனிப்பட்ட மெசேஜ் ஆகவும் உங்களுக்கு கிடைக்கலாம்.
  • நீங்கள் ஒரு நபருக்கு தனியாக அனுப்பு மெசேஜ், நீங்கள் இடம் பெற்ற குழுவில் வெளியாகலாம்.

உங்கள் வாட்ஸ்அப் மெசேஜ்கள் மூன்று வகைகளில் ஹாக் செய்யப்படுகிறது: ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

இதுகுறித்து வெளியிட்டப்பட அறிக்கையில், தவறான செய்திகள் வாட்ஸ்அப் மூலம் பரப்ப படுவதை தடுக்க பல்வேறு அப்டேட்களை வாட்ஸ்அப் நிறுவனம் செய்து வருகிறது. இந்த அப்டேட்களில் அட்மின்களுக்கு சிறப்பு அதிகாரமும் அளிக்கப்பட்டு, மற்றவர்கள் தவறான தகவல் பகிர்வதை தடுத்துள்ளது. மற்ற குழு நிர்வாகிகளைக் குறைப்பதும் சாத்தியமாக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் ஒரு குழுவில் இருந்து வெளியேறிய ஒருவரை மீண்டும் அந்த குழுவில் இணைத்தால், அவரை இணைக்க அனுமதி மறுக்கும் அப்டேட்டும் எதிர்காலத்தில் வெளியாக உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.