10,000 விலைக்குள் அற்புதமான 5 சிறந்த ஸ்மார்ட்போன்கள்..!

புதிதாக மொபைல் வாங்க விரும்புபவர்களுக்கு ஏற்படும் குழப்பத்தை தீர்க்கும் வகையிலாக 4ஜி வோல்ட்இ ஆதரவு பெற்று ரூபாய் 10,000 த்திற்குள் விற்பனை செய்யப்படுகின்ற அற்புதமான 5 சிறந்த ஸ்மார்ட்போன்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

5 சிறந்த ஸ்மார்ட்போன்

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற 4ஜி ஆதரவுடன் கூடிய வோல்ட்இ நுட்பத்துடன் சிறப்பான செயல்திறன், கேமரா , கேமிங் போன்றவற்றை வழங்கும் வகையிலான மொபைல்கள் ஆசிரியர் குழுவின் பரிந்துரையின்படி தொகுக்கப்பட்டுள்ளது.

சியோமி ரெட்மி நோட் 4

இந்திய சந்தையில் மிக பிரபலமாக உள்ள சியோமி பிராண்டில் விற்பனை செய்யப்படுகின்ற சியோமி ரெட்மி நோட் 4 மொபைல் அற்புதமான 5.5 இன்ச் முழு ஹெச்டி திரையுடன்  (1080p) 2.5 D கிளாஸ் பொருத்தப்பட்டு, இதில் ஸ்னாப்டிராகன் குவால்காம் 625 சிப்செட் பிராஸசர் பெற்று கேமராவில் 13 மெகாபிக்சல் ரியர் கேமராவில் CMOS சென்சார் எல்இடி பிளாஷ் ,  f/2.0 அப்ரேச்சர் , PDAF ஆதரவுடன் விளங்கும். முன்பக்க கேமரா 5 மெகாபிக்சல்  கேமராவிலும் CMOS சென்சாரை பெற்றுள்ளது.

2ஜிபி ,3ஜிபி மற்றும் 4ஜிபி என மொத்தம் மூன்று விதமான ரேம் ஆப்ஷனில் கிடைக்கின்றது.4100mAh பேட்டரியுடன் கூடுதல் விருப்பங்களாக 4ஜி, 4ஜி வோல்ட்இ , வை-ஃபை உள்பட அடிப்பையான ஆதரவுகளை கொண்டுள்ளது.

ரெட்மி 4ஏ விலை விபரம்

2GB/ 32GB- ரூ 9,999
3GB/32GB- ரூ 10,999
4GB/64GB- ரூ 12,999

ஹூவாய் ஹானர் 5C

ரூ.10,999 விலையில் கிடைக்கின்ற ஹூவாய் ஹானர் 5C மொபைலில் 5.2 இன்ச் ஹெச்டி டிஸ்பிளே (1080 x 1920 pixels) , 2.0 GHz + 1.7 GHz கிரின் 650 ஆக்டோ கோர் பிராசஸர் பெற்று 2ஜிபி ரேம் வசதியுடன் இணைந்து செயல்படுகின்ற ஹானர் 5சி மொபைலில் 16ஜிபி இன்டர்னல் மெம்மரி வசதியுடன் கேமராவில் பின்புறத்தில் 13MP பிரைமரி கேமரா எல்இடி பிளாஷ் பெற்று , முன்புறத்தில் 5MP செல்ஃபீ கேமரா பெற்றுள்ளது.

4ஜி வோல்ட்இ ஆதரவுடன் இந்த மொபைல் சிறப்பான கேமரா மற்றும் செயலாற்றலை கொண்டாத விளங்குகின்றது.

 

லெனோவா கே6 பவர்

லெனோவா K6 பவரில் 5.5 அங்குல முழு ஹெச்டி திடையுடன் 1080×1920 பிக்சல் தீர்மானத்தை கொண்டுள்ளது. கே6 பவரில் Adreno 505 ஜிபியூ  மற்றும் 1.4GHz அக்டா கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 430 ப்ராசசர் மூலம் 3ஜிபி ரேம் மற்றும் 4ஜிபி ரேம் போன்றவற்றில் கிடைக்கின்றது.

எல்இடி ஃபிளாஷ் , சோனி ஐஎம்எக்ஸ்258 சென்சார் கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் ஃபிளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.

3ஜி, 4ஜி VoLTE , மைக்ரோ யூஎஸ்பி என பலவற்றை பெற்றுள்ள கே6 பவர் மொபைல் விலை 3GB ரேம் 32GB சேமிப்பு ரூபாய் 9,999 மற்றும் 4GB ரேம் 32GB சேமிப்பு ரூ. 10,999 ஆகும்.

சியோமி ரெட்மி 3எஸ் பிரைம்

சியோமி பிராண்டின் மற்றொரு மாடலான ரெட்மி 3S பிரைம் இந்திய சந்தையில் முன்னணி மொபைலாக தொடர்ந்து வலம் வருகின்றது. இந்த மொபைல் 5 இன்ச் முழு ஹெச்டி திரையுடன் கூடிய ஸ்மார்ட்போனில் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோகோர் 430 ஸ்னாப்டிராகன் பிராசஸர் பெற்று 3ஜிபி ரேம் 32ஜிபி சேமிப்பு திறனுடன் கைரேகை ஸ்கேனர் கிடைக்கும்.

13 மெகாபிக்சல் பின்புற கேமராவில் தெளிவான படங்கள் 1080p வீடியோவினை பதிவு செய்யும் வகையில் இரட்டை எல்இடி பிளாஷ் மற்றும் PDAF போன்ற வசதிகள் உள்ளன. முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் ஆட்டோஃபோகஸ் கேமரா இடம்பெற்றுள்ளது.

சியோமி ரெட்மி 3எஸ் பிரைம் விலை ரூபாய் 8,999

சியோமி ரெட்மி 4ஏ

பட்ஜெட் விலையில் 4ஜி எல்டிஇ , VoLTE ஆதரவு கொண்ட சியோமி ரெட்மி 4ஏ ஸ்மார்ட்போனில்  5 அங்குல ஹெச்டி IPS திரை ஆப்ஷனை பெற்று 1280 x 720 பிக்சல் தீர்மானத்துடன் 1.4GHz  க்வாட்கோர் ஸ்னாப்டிராகன் 425 SoC உடன் 64 பிட் பிராசஸருடன்  2GB ரேம் உடன் 16 ஜிபி பெற்றிருப்பதுடன் கூடுதலாக மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 128 ஜிபி வரை சேமிப்பினை அதிகரிக்கலாம்.

ஒற்றை எல்இடி பிளாஷ் பெற்ற 13 மெகாபிக்சல் பின்புற கேமராவுடன்   f/2.2 அப்ரேச்சர் பெற்று 5 எலமென்ட் லென்ஸ்களை பெற்றுள்ளது. செல்ஃபீ கவுன்டவுன் வசதியுடன் கூடிய 5 மெகாபிக்சல் கேமராவினை முன்பக்கத்தில் பெற்றுள்ளது.

3120mAh திறன் கொண்ட பேட்டரி திறனை பெற்றிருப்பதுடன், சியோமி ரெட்மி 4A மொபைல் விலை ரூ.5999

[td_smart_list_end]

Recommended For You