கூகுளின் பிக்சல் ஸ்மார்ட்போன் வரிசையில் அடுத்து வரவுள்ள கூகுள் பிக்சல் 4 (Google Pixel 4) ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியிடப்பட்டுள்ளது. வருகின்ற அக்டோபர் மாதம் பிக்சல் 4 மற்றும் பிக்சல் 4 XL மொபைல் போன்கள் விற்பனைக்கு கிடைக்கலாம்.
கடந்த சில வாரங்களாக பிக்சல் 4 பற்றி பல்வேறு முக்கிய விபரங்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ டீசரை வெளியிட்டுள்ளது. இந்த டீசரின் வாயிலாக பிக்சல் 4 மொபைல்கள் இரண்டு கேமரா லென்ஸ் , எல்இடி ஃபிளாஷ் மற்றொரு சென்சாருடன் சதுரங்க வடிவில் கேமரா பம்ப் போன்றதாக காணப்படுகின்றது.
கூகுள் பிக்சல் 4 எதிர்பார்ப்புகள்
பிக்சல் 4 மொபைல் முதல் கூகுள் நிறுவனமும், குறைந்தபட்சம் இரண்டு கேமரா லென்ஸ்களை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சதுரங்க வடிவில் கேமரா பம்ப் பெற்ற பிரைமரி லென்ஸ் மற்றும் டெலிபோட்டோ லென்ஸ் அல்லது அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ்களி்ல் எதாவது ஒன்றாக இருக்க வாய்ப்புகள் உள்ளது. மேலும் கேமரா ரெசல்யூஷன் பற்றி எந்த உறுதியான தகவலும் இல்லை.