MWC 2019: மோட்டோ ஜி7 சீரிஸ் நுட்ப விபரம் மற்றும் விலை லீக்கானது

மோட்டோரோலா நிறுவனத்தின், மோட்டோ ஜி7 சீரிஸ் ஸ்மார்ட்போன் வரிசை முழுதாக மோட்டோ பிரேசில் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. மோட்டோ ஜி7, மோட்டோ ஜி7 பிளே, மோட்டோ ஜி7 பிளஸ் மற்றும் மோட்டோ ஜி7 பவர் என மொத்தம் நான்கு மாடல்கள் வெளியாக உள்ளது.

மோட்டோ ஜி7 சீரிஸ்

வாட்டர் ட்ராப் நாட்ச் டிஸ்பிளேயுடன் கூடிய 12 மெகாபிக்சல்ஸ் மற்றும் 5 மெகாபிக்சல்ஸ் என  டூயல் கேமரா பெற்ற மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ள ஜி7 சீரிஸ் மாடல்களில் பொதுவாக குவால்காம் நிறுவனம் ஸ்னாப்டிராகன் 632 சிப்செட் பிராசெஸர் இடம்பெற்றிருக்கலாம்.

ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்தில் செயல்படும் இந்த மொபைல்கள் செயல்படுவதுடன் மோட்டோ ஜி7 பிளே 2ஜிபி ரேம் மற்றும் ஜி7 பவர் 3ஜிபி ரேம் மற்ற மோட்டோ ஜி7 , மோட்டோ ஜி7 பவர் மாடல்கள் 4ஜிபி ரேம் பெற்றிருக்கலாம். அனைத்து மொபைல்களும் 64 ஜிபி உள்ளடக்க மெமரி பெற்றிருக்கும்.

MWC 2019: மோட்டோ ஜி7 சீரிஸ் நுட்ப விபரம் மற்றும் விலை லீக்கானது

எட்ஜ்-டு-எட்ஜ் 6.24 அங்குல டிஸ்பிளே 2,270 x 1,080 பிக்சல்ஸ், வாட்டர் டிராப் வடிவம் கொண்ட நாட்ச், 3500 mAH பேட்டரி, பின்புறம் 12 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, மற்றும் 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட உள்ளது.

ரூ.12,500 விலையில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற மோட்டோ ஜி7 மாடலின் ஜி7 பவர் மாடல் விலை அதிகபட்சமாக ரூ. 17,000 வரை அமைந்திருக்கலாம்.

MWC 2019: மோட்டோ ஜி7 சீரிஸ் நுட்ப விபரம் மற்றும் விலை லீக்கானது