சாம்சங் மொபைல் போன் தயாரிப்பாளரின் முதல் மடிக்கூடிய மொபைலாக சாம்சங் கேலக்ஸி Flex அல்லது சாம்சங் கேலக்ஸி Fold என்ற பெயரில் வெளியாக உள்ள ஸ்மார்டுபோன் தொடர்பான விபரம் வெளியாகியுள்ளது.
சாம்சங் கேலக்ஸி F
சீனாவின் China’s Ministry of Industry and Information Technology (CMIIT) சான்றிதழ் வழங்கும் மையத்தில் வெளியான முக்கிய தகவலை Nashville Chatter இணையதளம் வெளியிட்டுள்ள விபரத்தில் கேலக்ஸி ஃபோல்டு அல்லது கேலக்ஸி ஃபிளக்ஸ் மாடலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சீனாவின் மொபைல் சான்றிதழ் வழங்கும் மையத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள விபரத்தின் வாயிலாக இதில் இடம்பெற்றுள்ள SM-F900 என்ற குறியீடு, இந்த மாடலை ஃபோல்டபிள் எனப்படும் மடிக்கூடிய மொபைல் போனாக உறுதிப்படுத்தியுள்ளது.
image source – Nashville Chatter
SM-F900U, SM-F900F மற்றும் SM-F900N என்ற குறியீடுகளும் உள்ளது. இதில் ஆசியாவிற்கு SM-F900N , ஐரோப்பா சந்தைக்கு SM-F900F மற்றும் அமெரிக்கா சந்தையில் SM-F900U என வழங்கப்படுகின்றது.
இந்த மடிக்கடிய கேலக்ஸி எஃப் மொபைல் போன் பற்றி நுட்ப விபரங்கள் வெளியாகவில்லை. இந்த மொபைல் 7.3 இன்ச் திரை , 512 ஜிபி சேமிப்பு மற்றும் மூன்று கேமரா பின்புறத்தில் வழங்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது. மேலதிக விபரங்கள் மற்றும் முழுமையான காட்சிக்கு சாம்சங் கேலக்ஸி எஸ்10 வெளியிடப்பட உள்ள பிப்ரவரி 20ந் தேதி வெளியாகலாம்.
சாம்சங் கேலக்ஸி F போன் விலை டாலர் 1800 (ரூ.1.27 லட்சம் ) ஆக அமைதிருக்கலாம்.