வருகின்ற ஜனவரி 28ந் தேதி வெளியாக உள்ள சாம்சங் கேலக்ஸி எம் வரிசையில் இடம்பெற உள்ள புதிய சாம்சங் கேலக்ஸி எம்10 மொபைல் போன் நுட்ப விபரம் வெளியாகியுள்ளது. கேலக்ஸி எம் வரிசை மொபைல் அமேசான் வாயிலாக விற்பனைக்கு கிடைக்கும்.
சமீபத்தில் இணையத்தில் வெளியாகியுள்ள விபரங்களின் படி கேலக்ஸி எம்10 போனில் 3,400mAh பேட்டரி உடன் 2 ஜி.பி. மற்றும் 3 ஜி.பி என இரு வகையான ரேம் மாறுபாட்டில் விற்பனைக்கு கிடைக்கலாம்.
சாம்சங் கேலக்ஸி எம்10
கேலக்ஸி எம்10 போனில் மிக அசத்தலான வாட்டர் டிராப் ஸ்டைல்டு இன்ஃபினிட்டி வி நாட்ச் பெற்ற 19;9 எல்சிடி முழு திரை அமைப்பு 6.2 இன்ச் ஹெச்டி தரத்துடன் (720 x 1,520 பிக்சல்ஸ்) கொண்டு எக்ஸ்னோஸ் 7872 SoC சிப்செட் கொண்டு இயங்கும் 2 ஜி.பி. மற்றும் 3 ஜி.பி. ரேம் என இருவிதமான மாறுபாட்டில் 16 ஜி.பி. மற்றும் 32 ஜி.பி. என இருவதமான உள்ளடக்க மாறுபாட்டில் கிடைக்கப் பெறும்.
பின்புறத்தில் எல்இடி ஃபிளாஷ் பெற்ற 13 மற்றும் 5 மெகாபிக்சல் கேமரா சென்சார் வழங்கப்பட்டு முன்புறத்தில் 8 மெகாபிக்சல் கேமரா சென்ஆர் பெற்றிருக்கலாம். ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தில் தொடங்க உள்ள கேலக்ஸி எம் 10 மொபைல் போனில் 3,400mAh பேட்டரி மிக விரைவாக சார்ஜிங் செய்யும் வசதியை பெற்றிருக்கலாம்.
சாம்சங் கேலக்ஸி எம் வரிசை மொபைல்கள் , ஷியோமி நிறுவனத்தின் பட்ஜெட் ரக மொபைல்களுக்கு மிகுந்த சவாலாக அமைந்திருக்கும் என்பதனால், இந்த எம் வரிசை மொபைல் ஆரம்ப விலை ரூ.8,500 முதல் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
updated :-
சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் விலை பட்டியல்
சாம்சங் கேலக்ஸி எம் 10 2 GB / 16 GB – ரூ.7,990
சாம்சங் கேலக்ஸி எம் 10 3 GB / 32 GB – ரூ.9,490
சாம்சங் கேலக்ஸி எம் 20 3 GB / 32 GB – ரூ.10,990
சாம்சங் கேலக்ஸி எம் 20 4 GB / 64 GB – ரூ.12,990