இந்திய மொபைல் தயாரிப்பாளரான வீடியோகான் நிறுவனத்தின் புதிய வீடியோகான் டிலைட் வரிசையில் புதிதாக டிஎலைட் 11+ 4ஜி வோல்ட்இ மொபைல் விற்பனைக்கு வந்துள்ளது.

ரூ. 5800 க்கு வீடியோகான் டிலைட் 11+ மொபைல் அறிமுகம்

வீடியோகான் டிலைட் 11+

  • 5-இஞ்ச் FWVGA (480×854 pixels) டிஸ்பிளேவை பெற்றுள்ளது.
  • ப்ரோ 360 ஓஎஸ் வசதிகளுடன் கூடிய தளத்தில் செயல்படுகின்றது.
  • 4ஜி வோல்ட்இ மற்றும் முன்பக்க ஃபிளாஷ் பெற்ற கேமராவை பெற்றதாக விளங்குகின்றது.

வீடியோகான் டிலைட் 11+ மொபைல் ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லா இயங்குதளத்தினை அடிப்படையாக கொண்ட ப்ரோ 360 ஓஎஸ் பெற்றதாக உள்ளது. புரோ 360 ஓஎஸ் அமைப்பில் மிக சிறப்பான செக்யூரிட்டி , தனியுரிமை சார்ந்த அம்சங்களை கொண்டாதக உள்ளது.

5 அங்குல FWVGA கிளாஸ் பெற்று 480×854 பிக்சல் தீர்மானத்தை பெற்ற டிஸ்பிளேவுடன் 1GHz க்வாட் கோர் மீடியாடெக் MT6735M பிராசஸர் பெற்று 1ஜிபி ரேம் ஆப்ஷனை கொண்டதாக வந்துள்ளது.

 

இந்த மொபைல்போனில் முன்புறத்தில் 5 மெகாபிக்சல் எல்இடி ஃபிளாஷ் பெற்ற கேமரா வசதியுடன் முன்புறத்தில் பெற்றுள்ள 2 எம்பி செல்ஃபீ கேமரா எல்இடி ஃபிளாஷ் வசதியை கொண்டதாக விளங்குகின்றது.

8 ஜிபி உள்ளடங்கிய மொபைல் சேமிப்பு வசதியுடன் கூடுதலாக 32ஜிபி வரை நீட்டிக்கும் வகையில் மைக்ரோ எஸ்டி அட்டையை பயன்படுத்தலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் துனை விருப்பங்களாக  4G VoLTE, ஜிபிஎஸ், வை-ஃபை 802.11 b/g/n, ப்ளூடுத் v4.0,மைக்ரோ யூஎஸ்பி போன்றவற்றை பெற்றிருக்கின்றது. 3000mAh பேட்டரி திறன் பெற்றுள்ளது.

நாடு முழுவதும் வீடியோகான் டிஎலைட் 11+ மொபைல் ரூபாய் 5800 விலையில் இந்த மாத இறுதியில் விற்பனைக்கு கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here