சுதந்திர தினத்தை முன்னிட்டு விவோ மொபைல் நிறுவனத்தின் அதிரடி விலை குறைப்பு விற்பனை

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு விவோ நிறுவனத்தின் அதிரடி விலை குறைப்பு அறிவிப்பு பொபைல் வாடிக்கையாளர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

சீனாவை பூர்வீகமாக கொண்டு செயல்படும் விவோ நிறுவனம், இந்தியர்களின் உணர்வை புரிந்துக் கொண்டு, இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் தரக்கூடிய அறிவிப்பு ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு விவோ மொபைல் நிறுவனத்தின் அதிரடி விலை குறைப்பு விற்பனை

கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான விவோ என்இஎக்ஸ் என்ற புதிய மாடல் மொபைல் போன் வாடிக்கையாளர்களை மிகவும் கவர்ந்தது. அதன் நேர்தியான அமைப்பும், தற்காலத்திற்கு ஏற்ற அதிநவீன தொழில்நுட்பமும் வெகுவாக பேச வைத்தது.

இந்நிலையில், இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ரூ.44,990 விலையான விவோ என்இஎக்ஸ் மொபைல் போனை வெறும் 1,947 ரூபாய்க்கு ஆன்லைன் ப்ளாஷ் சேல் மூலம் விற்க முடிவு செய்துள்ளது விவோ நிறுவனம். இது வாடிக்கையாளர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு விவோ மொபைல் நிறுவனத்தின் அதிரடி விலை குறைப்பு விற்பனை

இந்த அதிரடி தள்ளுபடி விற்பனை 3 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது ஆகஸ்ட் 7ம் தேதி முதல் (6ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல்) ஆகஸ்ட் 9ம் தேதி வரை விவோ என்இஎக்ஸ் நிறுவனத்தின் இணையதளமான shop.vivo.com/in -ல் விற்பனை செய்யப்படவுள்ளது.

இச்சலுகை மட்டுமல்லாமல், அதிரடி விலை குறிப்புகள், கேஸ்பேக் ஆப்பர் என பல ஆச்சரியப்படுத்தும் அறிவிப்புகள் இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Comments are closed.