Vivo_iqoo_pro

இந்தியாவில் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் மாடலாக விவோவின் iQOO ஸ்மார்ட்போனை விற்பனைக்கு கொண்டு வருவதனை உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் கொண்டதாக விளங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் விவோ நிறுவனத்தின் அங்கமான ஐக்யூ பிராண்டில் பல்வேறு ஸ்மார்ட்போன்கள் சீன நாட்டில் விற்பனை செய்யப்படும் நிலையில், தனது முதல் மாடலை பிப்ரவரி மாதம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக இந்நிறுவனம் உறுதி செய்துள்ளது. மேலும் இந்நிறுவனம் கொண்டு வரவுள்ள மாடலில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் மற்றும் 5ஜி ஆதரவு பெற்ற குவால்காம் 865 சிப்செட் இடம்பெற்றிருக்கும் என குறிப்பிட்டுள்ளது.

IQOO (‘I Quest On and On’) தொலைபேசி ஸ்னாப்டிராகன் 865 மொபைல் இயங்குதளத்தால் இயங்கும் இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போனாகும்.  மேலும் 5 ஜி ஆதரவையும் கொண்டுள்ளது. சார்ஜிங், கேமிங் மற்றும் வடிவமைப்புத் துறையில் வலுவான செயல்திறனை கொண்டுள்ளது.

iQOO தனது தொலைபேசிகளை இந்தியாவில் ஆன்லைன் தளங்களில் விற்பனை கொண்டு வருவதுடன், படிப்படியாக ஆஃப்லைனில் விற்பனைக்கு மேம்படுத்த உள்ளது. மேலும் விபரங்கள் பிப்ரவரியில் வெளியாகும்.