விவோ நிறுவனத்தின் ஐகியூ பிராண்டின் முதல் கேமிங் ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. விவோ ஐகியூன் ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை 31,700 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விவோ ஐகியூ போனில் 6 ஜிபி ரேம்,  8 ஜிபி ரேம் , மற்றும் 12 ஜிபி ரேம் என மூன்று விதமான மாறுபாட்டில் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி என மொத்தமாக மூன்று விதமான மாறுபாட்டில் கிடைக்க தொடங்கியுள்ளது.

ஐகியூ ஆங்கிலத்தில் என்னவென்றால் iQOO (“I Quest On and On”) ஆகும்.

விவோ ஐகியூ போனின் சிறப்புகள் மற்றும் வசதிகள்

ஐகியூ பிராண்டின் முதல் ஸ்மார்ட்போன் மாலாக வெளிவந்துள்ள இந்த போனில் வேப்பர் கூலிங் சிஸ்டத்தை பெற்றுள்ளது. இதன் மூலம் கேமிங் நேரங்களில் அதிகபட்சமாக மொபைலின் வெப்பத்தை 12 டிகிரி செல்சியூஸ் வரை குறைக்கும் எவ்விதமான செயல்திறன் பாதிப்பில்லாமல் மேற் கொண்டுள்ளது.

6.42 அங்குல முழு ஹெச்டி AMOLED திரை உடன் 1080×2340 பிக்சல்ஸ் தீர்மானத்துடன் மற்றும் வாட்டர் டிராப் டிஸ்பிளேவை கொண்டதாக வந்துள்ளது. இந்த மொபைல் போன் 91.7 சதவீத ஸ்கீரின் டூ பாடி விகிதாசாரத்தை பெற்றுள்ளது.

ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை பின்பற்றி ஃபன்டச் ஓஎஸ் 9 கொண்டு செயல்படுகின்ற ஐகியூவின் போனில் குவால்கம் ஸ்னாப்டிராகன் 885 SoC உடன் 6 ஜிபி ரேம்,  8 ஜிபி ரேம் , மற்றும் 12 ஜிபி ரேம் கொண்டுள்ளது.  6ஜிபி ரேம்/128 ஜிபி சேமிப்பு , 8ஜிபி ரேம்/128 ஜிபி , 8 ஜிபி ரேம்/256 ஜிபி சேமிப்பு மற்றும் 12 ஜிபி ரேம்/256 ஜிபி சேமிப்பை கொண்டதாக அமைந்துள்ளது.

மூன்று பின்புற கேமராக்கள் சென்சார் ஐகியூ ஸ்மார்ட்போனில் இருப்பதால் 13 மெகாபிக்சல் உடன் சோனி IMX263 சென்சாருடன் , 12 மெகா பிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் சென்சார் பிரைமரி கேமராக்கள் கொண்டுள்ளது. அதுபோல், செல்ஃபி மற்றும் வீடியோ காலிங் வசதிக்காக 12 மெகாபிக்சல் முன்புறம் அமைந்துள்ளது.

இந்த போனின் மிகப்பெரிய அம்சமே பக்கவாட்டில் அமைந்துள்ள இரு பட்டன்கள் (Monster Touch shoulder பொத்தான் ) உதவியுடன் எவ்விதமான கேம் கன்சோல் இணைப்பும் இல்லாமல் கேமிங் விளையாடுவதற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் போனில் வழங்கப்பட்டுள்ள வேப்பர் கூலிங் சிஸ்டம், ஐகியூவின் வெப்பத்தை 12 டிகிரி செல்சியூஸ் வரை குறைக்கும் என குறிப்பிப்பட்டுள்ளது. இந்த செயல்பாடு போனின் செயல்பாட்டை குறைக்காமல் வெப்பநிலையை குறைக்க உதவும் வகையில் வந்துள்ளது.

மற்றொரு சிறப்பு அம்சமாக இந்த போனில் மல்டி மோட் வழங்கப்பட்டுள்ளது.  Turbo, Centre Turbo, Net Turbo, Cooling Turbo, மற்றும் Game Turbo போன்ற மோடின் உதவியுடன் சிறப்பான அம்சத்தை பெற்றுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ள அதிவிரைவு விவோ 44W சூப்பர் ஃபாஸ்ட் நுட்பமானது, இந்த மொபைலின் 100 சதவீத சார்ஜை வெறும் 45 நிமிங்களில் 4,000mAh பேட்டரியை சார்ஜிங் செய்வதுடன், 50 சதவீத சார்ஜிங் செய்ய 15 நிமிடங்கள் மட்டும் போதுமானதாகும். மேலும், 4G எல்டிஇ, வை-ஃபை, ப்ளூடூத், GPS/ A-GPS, மற்றும் USB Type-C போர்ட் போன்றவை இடம்பெற்றுள்ளது.

விவோ ஐகியூ மொபைல் விலை பட்டியல்

6 ஜிபி ரேம்/128 ஜிபி சேமிப்பு – ரூபாய் 32,000

8 ஜிபி ரேம்/128 ஜிபி சேமிப்பு – ரூபாய் 35,000

8 ஜிபி ரேம்/256 ஜிபி சேமிப்பு – ரூபாய் 38,000

12 ஜிபி ரேம்/256 ஜிபி சேமிப்பு – ரூபாய் 45,000

சீன சந்தையில் விற்பனைக்கு மாரச் 6ந் தேதி முதல் கிடைக்க உள்ள இத போனின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் குறிப்பிப்பட்டுள்ளது.