Vivo S1 Smartphone
Vivo S1 Smartphone

விவோ ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரின், விவோ எஸ் வரிசையில் முதன்முறையாக இந்தியாவில் விவோ S1 விற்பனைக்கு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட உள்ளது. இந்த மாடல் டிரிப்ள் கேமரா செட்டப் கொண்டதாக அறிமுகம் செய்யபடலாம்.

சமீபத்தில் இந்தோனேசியா சந்தையில் விற்பனைக்கு வெளியிடபட்ட விவோ எஸ்1 மாடல் விலை இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 17,700 என நிர்ணையிக்கப்பட்டு 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிப சேமிப்பு வசதி கொண்டதாக காணப்படுகின்றது.

விவோ எஸ் 1 ஸ்மார்ட்போன் மாடல் 6.38 அங்குல FHD + (2340 × 1080 பிக்சல்கள்)  வாட்டர் டிராப்-ஸ்டைல் உடன் கூடிய சூப்பர் AMOLED திரையை கொண்டுள்ளது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மீடியாடெக் ஹீலியோ P65 ஆக்டா கோர் சிப்செட்டை பெறும் முதல்மாடலாக எஸ்1 விளங்குகின்றது. 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி / 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் பெற்றதாக விற்பனைக்கு வரக்கூடும்.

பிரைமரி ஆப்ஷனில்  மூன்று கேமரா அமைப்புடன் வெளியாக உள்ள இந்த மொபைலில் 16 மெகாபிக்சல் சென்சார், 8 மெகாபிக்சல் வைட் ஏங்கிள் சென்சார் மற்றும் மூன்றாவது 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் பெற்றிருக்கும். செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புக்கு என 32 மெகாபிக்சல் முன் கேமரா இணைக்கப்பட்டிருக்கும்.

இன் டிஸ்பிளே கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் கொண்டு ஆண்ட்ராய்டு 9 பை-அடிப்படையிலான இயங்குதளத்தில் வரவுள்ளது. 4ஜி வோல்டிஇ, இரட்டை சிம் கார்டு, வைஃபை, புளூடூத் 5, யூ.எஸ்.பி-ஓ.டி.ஜி, மைக்ரோ யுஎஸ்பி போன்றவற்றை பெற உள்ளது.