vivo s1 smartphone

விவோ ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரின் புதிய S சீரியஸ் போனில் முதல் மாடலாக விவோ S1 ஸ்மார்ட்போன் ரூ.17,990 ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த மொபைல் போன் நடுத்தர ரக சந்தைக்கான மொபைல் போனாக அறியப்படுகின்றது.

விவோ எஸ் 1 இந்தியாவில் மூன்று வெவ்வேறு சேமிப்பு வகைகளில் வழங்கப்படுகிறது. தொடக்க நிலை மாடல் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்புடன் ரூ .17,990 க்கு கிடைக்கிறது. 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் ரூ .18,990 விலையில் கிடைக்கும். 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட டாப் மாடல் ரூ .19,990 விலையில் கிடைக்கும். அறிமுக சலுகைகளைப் பொறுத்தவரை, வாடிக்கையாளர்கள் எச்டிஎஃப்சி வங்கி கடன் மற்றும் டெபிட் கார்டு ஈ.எம்.ஐ பரிவர்த்தனைகளுடன் 7.5 சதவீத கேஷ்பேக் பெறலாம்.  ரிலையன்ஸ் ஜியோவிடம் இருந்து ரூ .10,000 வரை கேஷ்பேக் மற்றும் ரூ .2,500 கேஷ்பேக் பேடிஎம் மூலம் பெறலாம்.

விவோ எஸ் 1 ஸ்மார்ட்போன் மாடல் 6.38 அங்குல FHD + (2340 × 1080 பிக்சல்கள்)  வாட்டர் டிராப்-ஸ்டைல் உடன் கூடிய சூப்பர் AMOLED திரையை கொண்டுள்ளது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மீடியாடெக் ஹீலியோ P65 ஆக்டா கோர் சிப்செட்டை பெறும் முதல்மாடலாக எஸ்1 விளங்குகின்றது. 4ஜிபி/6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி / 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் பெற்றதாக உள்ளது.

பிரைமரி ஆப்ஷனில்  மூன்று கேமரா அமைப்புடன் வெளியாக உள்ள இந்த மொபைலில் 16 மெகாபிக்சல் சென்சார், 8 மெகாபிக்சல் வைட் ஏங்கிள் சென்சார் மற்றும் மூன்றாவது 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் பெற்றிருக்கும். செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புக்கு என 32 மெகாபிக்சல் முன் கேமரா கொண்டிருக்கின்றது.

இன் டிஸ்பிளே கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் கொண்டு ஆண்ட்ராய்டு 9 பை-அடிப்படையிலான இயங்குதளத்தில் வரவுள்ளது. 4ஜி வோல்டிஇ, இரட்டை சிம் கார்டு, வைஃபை, புளூடூத் 5, யூ.எஸ்.பி-ஓ.டி.ஜி, மைக்ரோ யுஎஸ்பி போன்றவற்றை பெற்றுள்ளது

ஆகஸ்ட் 8 ஆம் தேதி முதல் விவோ எஸ் 1 ஸ்மார்ட்போன் அமேசான் இந்தியா மற்றும் விவோவின் இ-ஸ்டோர் வழியாக ஆன்லைனில் கிடைக்கும்.