ரூ.8,999 ஆரம்ப விலையில் விவோ U10 விற்பனைக்கு வெளியானது

விவோ ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் இந்தியாவில் பிரத்தியகேமான விவோ U10 மாடலை ஆன்லைன் எக்ஸ்குளூசிவாக விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. 5,000mAh பேட்டரி, ஸ்னாப்டிராகன் 665 SoC, 3ஜிபி ரேம், 4ஜிபி ரேம் மற்றும் டிரிப்ள் கேமரா ஆப்ஷனை பெற்றதாக வந்துள்ளது. அமேசான்.இன் மற்றும் விவோவின் ஆன்லைன் ஸ்டோர் வழியாக பிரத்தியேகமாக விற்பனை செய்யப்பட உள்ளது.

விவோ U10 ஸ்மார்ட்போன் எச்டி + ரெசல்யூஷனுடன் 6.35 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 89 சதவீதம் ஸ்கிரீன்-டு-பாடி விகிதத்துடன் வருகிறது. வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் டிஸ்ப்ளே பெற்ற 3ஜிபி ரேம், 4 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 SoC மூலம் இயக்கப்படுகின்றது. மேலும், சேமிப்பை விரிவாக்க மைக்ரோ எஸ்.டி கார்டு ஸ்லாட்டும் உள்ளது.

இந்த சாதனத்தின் பின்புறத்தில் மூன்று கேமராக்களை கொண்டுள்ளது. இந்த அமைப்பில் 13 மெகாபிக்சல் சென்சார், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கூடுதலாக 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸும் உள்ளது.  செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு விவோ யு10-ல் 8 மெகாபிக்சல் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது.

இரட்டை சிம் கார்டு ஸ்லாட், புளூடூத், ஜி.பி.எஸ் மற்றும் 4ஜி வோல்டிஇ போன்ற வழக்கமான இணைப்பு விருப்பங்கள் பெற்று விவோ யு 10 மொபைலில் எலக்ட்ரிக் ப்ளூ மற்றும் தண்டர் பிளாக் வண்ணங்களில் கிடைக்கும். பயனர்களுக்கு சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்குவதற்காக அல்ட்ரா கேம் பயன்முறையும் உள்ளது. இதில் டார்க் மோட் மற்றும் பின்புற கைரேகை சென்சார் உள்ளது.

இந்த மொபைல் போன் ஆண்ட்ராய்டு 9 பை ஓஎஸ்  மூலம் இயக்கப்பட்டு  5,000 எம்ஏஎச் பேட்டரியை பெற்று கூடுதலாக 18W வேகமான சார்ஜிங் தொழில்நுட்பத்திற்கான ஆதரவை வழங்குகிறது.

விவோ யூ10 மொபைல் 3 ஜிபி ரேம் + 32 ஜிபி மாடலின் விலை ரூ .8,990, 3 ஜிபி ரேம் + 64 ஜிபி சேமிப்புக்கு ரூ .9,990 மற்றும் டாப் என்ட் 4 ஜிபி ரேம் + 6 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ .10,990 என அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் செப்டம்பர் 29 முதல் விற்பனைக்கு வரும். சலுகைகளைப் பொறுத்தவரை, எஸ்பிஐ வங்கி அட்டை வைத்திருப்பவர்கள் தொலைபேசி வாங்கும்போது உடனடி 10 சதவீத தள்ளுபடியைப் பெறலாம். கூடுதலாக, நீங்கள் ஆறு மாதங்களுக்கு குறைந்த விலை EMI விருப்பத்தையும் பெறுவீர்கள்.