Home Tech News Mobiles விவோ U20 டிரிபிள் ரியர் கேமரா, 5,000 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகப்படுத்தப்பட்டது

விவோ U20 டிரிபிள் ரியர் கேமரா, 5,000 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகப்படுத்தப்பட்டது

விவோ ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரின் புதிய U20 மொபைல் போனில் 6 ஜிபி மற்றும் 4ஜிபி ரேம் என இரு விதமான மாறுபாட்டில் மூன்று பிரைமரி கேமரா மற்றும் 5000 எம்ஏஎச் பேட்டரியை பெற்றதாக ரூ.10,990 ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

யூ20 ஸ்மார்ட்போனில் 6.53-இன்ச் முழு எச்டி + டிஸ்ப்ளே உடன் சுமார் 90.3 சதவீத ஸ்கிரீன்-டு-பாடி விகிதத்துடன், ஸ்னாப்டிராகன் 675 SoC மூலம் இயக்கப்பட்டு 4 ஜிபி ரேம் ,  6 ஜிபி ரேம் வரை இயக்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை பின்பற்றி ஃபன்டச் ஓஎஸ் 9 கொண்டதாக வந்துள்ளது.

16 மெகாபிக்சல் பிரதான புகைப்பட கேமராவுடன் மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இதில் 8 மெகாபிக்சல் சூப்பர் வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் சூப்பர் மேக்ரோ லென்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என பிரத்தியேகமான 16 எம்பி சென்சார் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

இரட்டை சிம் கார்டு ஆதரவினை கொண்ட விவோ U20 போனில் பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் மற்றும் விவோவின் 18W இரட்டை வேகமான சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் கூடிய 5000 எம்ஏஎச் பேட்டரியை பெற்றுள்ளது. இதன் மூலம் OTG கேபிளைப் பயன்படுத்தி பிற சாதனங்களையும் சார்ஜ் செய்யலாம். மேலும், மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட்டைக் கொண்டுள்ளது.

விவோ யு20 இந்தியாவில் இரண்டு வெவ்வேறு சேமிப்பு வகைகளில் கிடைக்கிறது. அடிப்படை மாடல் 4 ஜிபி ரேம் அல்லது 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டாண்டர்ட் ஸ்டோரேஜுடன் வருகிறது. 4 ஜிபி ரேம் கொண்ட அடிப்படை மாடலின் விலை ரூ .10,990, 6 ஜிபி ரேம் வேரியண்ட் ரூ .11,990 கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் ரேசிங் பிளாக் மற்றும் பிளேஸ் ப்ளூ கலர் விருப்பங்களில் வாங்கலாம். இது நவம்பர் 28 ஆம் தேதி முதல் விற்பனைக்கு அமேசான் மற்றும் விவோ வலைதளம் மூலமாக பகல் 12.00 மணி முதல் கிடைக்க உள்ளது.

மேலும் படிங்க – ரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போன் சிறப்புகள்

Exit mobile version