ஏர்டெல் ஆன்லைன் ஸ்டோரில் விற்பனைக்கு வந்துள்ளது  விவோ V11 புரோ; விலை ரூ.4,299

விவோ V11 புரோ ஸ்மார்ட் போன்கள் தங்கள் நிறுவன ஆன்லைன் ஸ்டோரில் விற்பனைக்கு வந்துள்ளதாக, பாரதி ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. 4 ஆயிரத்து 299 ரூபாய் விலையில் கிடைக்கும் இந்த மொபைல் போன்கள் போஸ்ட்பேய்டு இஎம்ஐ பிளான்களுடன் கிடைக்கிறது.

இதுகுறித்து ஏர்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த மொபைலை வாங்குபவர்களுக்கு, 100ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், ப்ரீ ரோமிங் மற்றும் இலவசமாக ஏர்டெல் டிவி மற்றும் அமேசான் பிரைம் சப்ஸ்கிரிப்சன்களும் சலுகையாக அளிக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது

ஏர்டெல் ஆன்லைன் ஸ்டோரில் விற்பனைக்கு வந்துள்ளது  விவோ V11 புரோ; விலை ரூ.4,299

இது குறித்து பேசிய பாரதி ஏர்டெல் நிறுவன மார்க்கெட்டிங் துறை தலைவர், வாணி வெங்கடேசன், 24 ஆயிரத்து 999 ரூபாய் துவக்க விலையாக கொண்டு விற்பனை வந்துள்ள V11 புரோ மொபைல்கள், இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார், 6.1 இன்ச் டச்ஸ்கிரீன் சூப்பர் AMOLED FHD+ ஹலோ ஃப்ள்வியூ டிஸ்பிளே, 12எம்பி+ 5எம்பி பிரைமரி கேமரா, 25எம்பி செல்பி கேரமா மற்றும் 64ஜிபி இன்டர்னல் மெம்மரியை கொண்டுள்ளது. இந்த மெம்மரியை 256ஜிபி வரை விரிவு படுத்தி கொள்ள முடியும். 4G ஸ்மார்ட்போனை மலிவு விலையில் வாங்க விரும்புபவர்களின் விருப்பமாக V11 புரே ஸ்மார்ட்போன்கள் இருந்து வருகிறது தெரிவித்துள்ளார்.

ஏர்டெல் ஆன்லைன் ஸ்டோரில் விற்பனைக்கு வந்துள்ளது  விவோ V11 புரோ; விலை ரூ.4,299

4G வசதியுடன் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன்கள், ஏர்டெல் ஆன்லைன் ஸ்டோரில் கிடைக்கும் முதல் விவோ நிறுவன ஸ்மார்ட்போன் என்பது குறிப்பிடத்தக்கது,

ஏர்டெல் ஆன்லைன் ஸ்டோர்களில் கேலக்சி நோட்9 மற்றும் ஐபோன் X உள்பட 30க்கும் மேற்பட்ட பிரிமியம் ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

1 COMMENT

Comments are closed.