ரூ 25,990 விலையில் விவோ V11 ப்ரோ அறிமுகம்

விவோ இந்தியா நிறுவனம் கடந்த மாதம் விவோ NEX மற்றும் விவோ Y83 ஸ்மாட்போன்களை அறிமுகம் செய்திருந்தது. இந்நிலையில் இந்த நிறுவனம் V11 ப்ரோ ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த போன்கள் விவோ v9 போன்களுக்கு மாற்றாகவே வெளியாகியுள்ளது. மேலும் இது ஒப்போ F9 ப்ரோ போன்களுக்கு சரியான போட்டியாக இருக்கும்.

விவோ V11 ப்ரோ ஸ்மார்ட் போன்கள் இந்த நிறுவனத்தின் முதல் புதிய ஸ்டைல் ஸ்மார்ட்போன்கள் மட்டுமல்லாமல் ஹலோ முழு டிஸ்பிளே போன்கள் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த போன்கள் 6.4 இன்ச் சூப்பர் அமோலேட் ஸ்கிர்ன் கொண்டதோடு, 19:5:9 விகித்தில் வடிவமைப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி V சீரிஸ் வரிசையில், முதல் பிங்கர் பிரிண்ட்ஸ் ஸ்கேனர் வசதியையும் கொண்டுள்ளது. இந் ஸ்மார்ட் போனின் ஹார்ட்வேர் ஸ்பெசிபிகேஷனை பொறுத்தவரையில், குவாட்-கோர் கோல்காம் ஸ்நாப்டிராகன் 660 பிராசசார், 6GB ரேம், 64GB ஸ்டோரேஜ் மற்றும் 3,400 mAh பேட்டரிகளுடன், டுயல் நானோ சிம் ஸ்லாட், மைக்ரோ SD ஸ்டோரேஜ் விரிவுபடுத்தும் வசதிகளை கொண்டுள்ளது.

ரூ 25,990 விலையில் விவோ V11 ப்ரோ அறிமுகம்

இந்த ஸ்மார்ட்போனில் டூயல் காமிரா செட்டப் 12MP + 5 MP மற்றும் AI டுயல் பிக்சல் டெக்னாலஜி, f1.8 அப்ப்சர் மற்றும் LED பிளாஸ், 25MP செல்பி காமிரா உடன் AI திறன் கொண்டது. இந்த் காமிராவில் பில்ட்-இன் லென்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. HDR மோடு, Ai பேஸ் பியூட்டி மற்றும் AR ஸ்டிக்கர்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

சாப்ட்வேர்களை பொறுத்தவரையில், V11 ப்ரோ உடன் நவீன பன்டச் OS v4.5 அடிப்படையிலான ஆண்டிராய்டு 8.1 ஆபரேடிங் சிஸ்டமில் இயக்கும். மேலும் இதில் பைக் மோடு, பேஸ் அனலாக் (இன்ப்ராரெட்), நேவிகேஷன் சப்போர்ட், ஸ்மார்ட் மோஷன் சைகைகள், ஒரு கையால் இயக்கும் மோடு மற்றும் ஆப் க்ளோன்களையும் கொண்டுள்ளது. V11 ப்ரோவில் கூடுதலாக ஜோவி-விவோவின் AI அசிஸ்டெண்ட்களுடன் வெளி வருகிறது.

ரூ. 25,990 விலையில் விற்பனைக்கு வந்துல் இந்த விவோ V11 ப்ரோ ஸ்மார்ட் போன்கள், டாசிலிங் கோல்ட் மற்றும் ஸ்ட்ராய் நைட் கலர்களில் கிடைக்கறது. நேற்று முதல் விற்பனை வந்துள்ளது. அறிமுக சலுகையாக ஹெச்டிஎப்சி கார்டுகளில் இந்த் மொபைலை வாங்குபவர்களுக்கு 2,000 ரூபாய் கேஷ் பேக் மற்றும் பேடிஎம் மால், நோ காஸ்ட் இஎம்ஐ, பைபேக் கேரன்ட்டி மற்றும் 4,050 ரூபாய் மதிப்பு கொண்ட ஜியோ பெனிப்பிட்டையும் கொண்டுள்ளது.