விவோ V15 ஸ்மார்ட்போன்

இந்தியாவில் ரூபாய் 23,900 விலையில் பாப் அப் செல்ஃபி கேமரா பெற்ற விவோ வி15 ஸ்மார்ட்போனினை வரும் ஏப்ரல் 1 முதல் விற்பனைக்கு முன்னணி இ-காமர்ஸ் மற்றும் ரீடெயில்களிடம் விற்பனைக்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்பாக விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு பெற்ற மாடல் விலை ரூ. 28,990 என விற்பனை செய்யப்படுகின்றது. இந்நிலையில் குறைந்த விலை மாடலாக வி15 கிடைக்க உள்ளது.

விவோ V15 ஸ்மார்ட்போன் விலை மற்றும் சிறப்புகள்

விவோ V15 புரோ மாடலில் உள்ள வசதிகளுக்கும் வி15 மாடலுக்கு உள்ள முக்கிய வித்தியாசங்களை உடனடி வாசிப்பு தொகுப்பாக காணலாம்.

 • வி15 ப்ரோவில் 48 மெகாபிக்சல் , 8 மெகா பிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் என பெற்றிருந்தாலும் வி15 மாடலில் 12 மெகாபிக்சல் , 8 மெகா பிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.
 • மீடியாடெக் ஹீலியோ பி70 சிப்செட் பெற்றதாக விவோ வி15 மாடல் விளங்குகின்றது. இத மாடல் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு பெற்றுள்ளது.  வி15 ப்ரோ மாடல் ஸ்னாப்டிராகன் 675 சிப்செட்  பெற்று 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு கொண்டுள்ளது.
 • இன் டிஸ்பிளே கைரேகை சென்சார் பெற்றதாக வி15 புரோ மாடல் விளங்குகின்றது. வி 15 மாடலில் பின்புறத்தில் கைரேகை சென்சார் உள்ளது.

6.53 அங்குல எஃப்எச்டி பிளஸ் 2340×1080  பிக்சல்ஸ் தீர்மானத்துடன், AMOLED டிஸ்பிளேவினை கொண்டு கார்னிங் கொரில்லா 5 கண்ணாடி பாதுகாப்பு அம்சத்தை பெற்றதாக வந்துள்ளது. இந்த போனை இயக்க மீடியாடெக் ஹீலியோ பி70 சிப்செட் பயன்படுத்தப்பட்டு 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது.

கேமரா பிரிவில் பிரைமரி ஆப்ஷனில் 12 மெகாபிக்சல் டூயல் பிக்சல் பெற்று, 8 எம்பி  AI 120 டிகிரி சூப்பர் வைட் ஏங்கிள் சென்சார் மற்றும் 5 எம்பி டெப்த் சென்சார் கொண்டதாக உள்ளது. பாப் அப் செல்பி கேமரா பிரிவில், 32 மெகாபிக்சல் செல்ஃபீ கேமரா மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என வழங்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை பின்பற்றி வெளியாகியுள்ள புதிய வி 15 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4000mAh பேட்டரி உடன் விரைவாக சார்ஜிங் ஆகின்ற வசதி உட்ப 4ஜி வோல்ட்இ, ப்ளூடுத், கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக், டூயல் டர்போ கேமிங் மோட் உள்ளிட்ட வசதிகளை கொண்டுள்ளது.

விவோ V15 ஸ்மார்ட்போன்

Vivo V15 specifications

 • 6.53-inch (2340 × 1080 பிக்சல்ஸ்) முழு HD+ 19:5:9 ஆஸ்பெக்ட் விகிதம் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
 • ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ P70, (Quad 2.1GHz Cortex A73 + Quad 2GHz Cortex A53 CPUs) உடன் 900MHz ARM Mali-G72 MP3  ஜிபியூ
 • 6GB ரேம், 64GB சேமிப்பு வசதி
 • 256GB உடன் மைக்ரோ எஸ்டி
 • ஆண்ட்ராய்டு 9.0 (Pie)உடன் Funtouch OS 9
 • இரு சிம் கார்டு
 • 12MP (Dual Pixel) ரியர் கேமரா சென்சார் f/1.78 துவாரம்,  5MP டெப்த் சென்சார் f/2.4 துவாரம், 8MP AI 120 டிகிரி கோண சூப்பர் ஒய்ட் ஏங்கிள் லென்ஸ் f/2.2 துவாரம்
 • 32MP செல்பி கேமரா சாம்சங் ISOCELL GD1 சென்சார் உடன் f/2.0 துவாரம்
 • கைரேகை சென்சார்
 • 3.5 mm ஆடியோ ஜாக், எஃப்எஃ ரேடியோ
 • அளவுகள்: 161.97×75.93×8.54mm; எடை: 189.5g
 • டூயல் 4G VoLTE, ஒய்ஃபை 802.11 ac டுயல் பேண்ட், ப்ளூடுத்  4.2, GPS/GLONASS, மைக்ரோ யூஎஸ்பி போர்ட்
 • 4000mAh பேட்டரி உடன் டூயல் என்ஜின் ஃபாஸ்ஃ சார்ஜிங்