விவோ வி15 ஸ்மார்ட்போன் விலை மற்றும் விபரங்கள் கசிந்தது

இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள விவோ வி15 ப்ரோ மொபைலை தொடர்ந்து விவோ வி15 ஸ்மார்ட்போன் மாடல் பிப்ரவரி 25ந் தேதி விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. வி15 ப்ரோ மாடலை விட குறைவான விலை கொண்ட பாப் அப் செல்ஃபீ கேமரா பெற்ற மாடலாக வி15 விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விவோ வி15 ஸ்மார்ட்போன் விலை விபரம்

சமீபத்தில் வெளியான வி15 ப்ரோ மாடல் ரூ.28,990 விலையில் வெளியிடப்பட்ட நிலையில், இதனை விட குறைந்த வசதிகளை பெற்றதாக வரவுள்ள விவோ வி15 ஸ்மார்ட்போனின் விலை ரூபாய் 22,000 முதல் ரூபாய் 25,000 த்திற்குள் அமைந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

வி15 ப்ரோ மாடலில் இடம்பெற்றிருந்த பெரும்பாலான வசதிகளில் மிக முக்கயமான 32 எம்பி பாப் செல்ஃபீ கேமரா சென்சாரை V15 பெற்றிருந்தாலும், பிரைமரியாக பின்புறத்தில் டிரிப்ள் கேமரா செட்டப்பில் மாற்றம் இல்லாமல், 48 எம்பி சென்சாருக்கு மாற்றாக 24 எம் சென்சார், 8 எம்பி வைட் ஏங்கிள் சென்சார் மற்றும் 8 எம்பி டெப்த் சென்சார் பெற்றிருகல்லாம்.

மேலும் திரையில் 6.39 அங்குல எல்சிடி திரையை பெற்று மீடியாடெக் ஹீலியோ பி70 சிப்செட் கொண்டதாக 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்க சேமிப்பை பெற்றதாக வரக்கூடும் என கசிந்த விபரங்கள் 91 மொபைல்ஸ் மூலம் தெரிய வந்துள்ளது.

Vivo v15 pro smartphone price

.விவோ நிறுவனம், இத வருடம் மொத்தமாக 14 புதிய மாடல்களை வெளியிட வாய்ப்புள்ளதாக தெரிகின்றது. இவற்றின் பெயர் விபரங்கள், சமீபத்தில் ஐரோப்பியாவில் விற்பனை பெயருக்கான பதிவு மூலம் தெரிய வந்துள்ளது. அவற்றில் விவோ எக்ஸ், விவோ ஒய் மற்றும் விவோ வி சீரிஸ் மாடல்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Vivo X series: X31, X33, X35, X37

Vivo V series: V17, V19, V21, V23, V25

Vivo Y series: Y40, Y50, Y60, Y80, Y90

மேலே வழங்கப்பட்டுள்ள பெயர்களில் புதிய மாடல்களை இந்நிறுவனம் வெளியிட வாய்ப்புள்ளது.