Vivo V15 Pro : விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் பிப்ரவரி 20-ல் அறிமுகம்

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பாப் அப் செல்பி கேமராவுடன் விவோ வி15 ப்ரோ மொபைல் போன் விற்பனைக்கு வரவுள்ளது. வி15 ப்ரோ மாடலில் 32 மெகாபிக்சல் பாப் அப் செல்ஃபி கேமரா இடம்பெற்றிருக்கும்.

உலகின் முதல் 32 மெகாபிக்சல் திறன் பெற்ற பாப் அப் செல்பி கேமரா இடம்பெற்றுள்ள இந்த மொபைலில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சமும் இடம் பெற்றுள்ளது. இதில் பின்புறத்தில் பிரைமரியா மூன்று கேமரா செட்டப் வழங்கப்பட்டுள்ளது. இந்த மொபைலின் விலை ரூ.33,000 க்குள் அமைந்திருக்கலாம்.

விவோ வி15 ப்ரோ மொபைலில் 6.39 அங்குல எஃப்எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளேவினை கொண்டு கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு அம்சத்தை பெற்றதாக வரவுள்ளது. ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை பெற்ற இந்த மொபைலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 சிப்செட் கொண்டதாக 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டதாக எதிர்பார்க்கப்படுகின்றது.

செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சத்தை பெற்ற வி15 ப்ரோ மாடலில் பின்புறத்தில் 12 மெகாபிக்சல் , 8 மெகா பிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் என மொத்தமாக மூன்று விதமான கேமரா சென்சாருடன் ஃபிளாஷை பெற்றிருக்கின்றது. உலகில் முதன்முறையாக பாப் அப் முறையில் அதாவது மொபைலை விட்டு மேலே எழும்பி வரும் வகையில் வழங்கப்பட்டு அதிகபட்சமாக 32 மெகாபிக்சல் செல்ஃபீ கேமரா வழங்கப்பட்டுள்ளது.

Vivo V15 Pro : விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் பிப்ரவரி 20-ல் அறிமுகம்

விவோ வி15 ப்ரோ மொபைல் விலை ரூ.25,000 முதல் ரூ.30,000 விலைக்குள் அமைந்திருக்கலாம். இந்த மொபைல் போனில் 3700mAh பேட்டரி கொண்டதாக அமைந்திருக்கும். பிப்ரவரி 15ந் தேதி வெளியாக உள்ள நிலையில் அதிகார்வப்பூர்வ வீடியோவை வெளியிட்டுள்ளது.