உலகின் முதலாவது 32 எம்பி பாப் அப் செல்பி கேமர பெற்ற விவோ நிறுவனத்தின் வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.28,990 தொடக்க விலையில் விற்பனைக்கு தொடங்கப்பட்டுள்ளது. 6 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி சேமிப்பு கொண்டதாக வந்துள்ளது.
பாப் அப் செல்பி கேமரா என்றால் என்ன ? பாப் அப் என்றால் பொதுவாக மேலே எழும்பி வரக்கூடியதை குறிக்கும். அந்த வகையில் செல்ஃபீ கேமரா பாப் அப் முறையில் மேலே எழும்பி வந்த படங்கள் மற்றும் வீடியோவை பதிவு செய்ய உதவுகின்றது.
Vivo V15 Pro ஸ்மார்ட்போன் சிறப்புகள் என்ன ?
விவோ மொபைல் போன் தயாரிப்பு நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய 5 மொபைல் தயாரிப்பாளர்களில் ஒன்றாக விளங்குகின்றது. சீனாவை தலைமையிடமாக கொண்ட இந்நிறுவனம் செல்ஃபீ கேமரா மொபைல்களுக்கு என மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மொபைல்களை வெளியிட்டிருந்த நிலையில் பாப் அப் செல்ஃபீ என்ற புதிய முறையை வெளிப்படுத்தியுள்ளது.
டிசைன் & டிஸ்பிளே
6.39 அங்குல எஃப்எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளேவினை கொண்டு கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு அம்சத்தை பெற்றதாக வந்துள்ளது. இந்த மொபைல் போனில் பின்புறமாக செங்குத்தான மூன்று கேமரா சென்சார்கள் எல்இடி ஃபிளாஷ் பெற்றுள்ளது. நீலம் மற்றும் சிவப்பு என இரு நிறங்களை பெற்றிருக்கின்றது.
பராசெஸர் & ரேம்
இந்தியாவில் முதன்முறையாக குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 675 சிப்செட் பிராசெஸர் கொண்டு மிக விரைவாக இயக்கப்படுகின்ற இந்த மொபைல் போனில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி கொண்டதாக வந்துள்ளது. கூடுதலாக மெமரி திறனை அதிகரிக்க 512 ஜிபி மைக்ரோ எஸ்டி கார்டினை பயன்படுத்தலாம்.
விவோ வி 15 ப்ரோ கேமரா
செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சத்தை பெற்ற வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மொபைல் போன் மாடலில் பின்புறத்தில் 48 மெகாபிக்சல் , 8 மெகா பிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் என மொத்தமாக மூன்று விதமான கேமரா சென்சாருடன் எல்இடி ஃபிளாஷை பெற்றிருக்கின்றது. உலகில் முதன்முறையாக பாப் அப் முறையில் அதாவது மொபைலை விட்டு மேலே எழும்பி வரும் வகையில் வழங்கப்பட்டு அதிகபட்சமாக 32 மெகாபிக்சல் செல்ஃபீ கேமரா மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என வழங்கப்பட்டுள்ளது.
பேட்டரி
ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை பின்பற்றி வெளியாகியுள்ள புதிய வி 15 ப்ரோ ஸ்மார்ட்போனில் 3700mAh பேட்டரி உடன் விரைவாக சார்ஜிங் ஆகின்ற வசதி கொண்டுள்ளது.
மற்றவை
4ஜி வோல்ட்இ, ப்ளூடுத், கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக், டூயல் டர்போ கேமிங் மோட் உள்ளிட்ட ஆதரவுகளை கொண்டுள்ளது.
விவோ V15 Pro மொபைல் விலை
விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு பெற்ற மாடல் விலை ரூ. 28,990 ஆகும். மார்ச் 6ந் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும்.
வி15 ப்ரோ போனை எங்கே வாங்கலாம் ?
அமேசான் இந்தியா மற்றும் ஃபிளிப்கார்ட் என இரண்டு முன்னணி தளங்கள் உட்பட ஆஃப்லைனிலும் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.