பாப் அப் செல்ஃபி கேமரா பெற்ற விவோ வி15 ப்ரோ (Vivo V15 Pro) 28,990 ரூபாய்க்கு விற்பனை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. வி15 ப்ரோவின் விற்பனை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரண்டிலும் கிடைக்க தொடங்கியுள்ளது. உலகின் முதலாவது 32எம்பி பாப் அப் செல்பி கேமராவை பெற்ற மாடலாக அறியப்படுகின்றது.

அறிமுக விலையாக ரூபாய் 28,990 க்கு விவோ இணையதளம், அமேசான் , ஃபிளிப்கார்ட் மற்றுஃ அனைத்து முன்னணி ரீடெயிலர்களிடமும் கிடைக்க தொடங்கியுள்ளது. கடந்த 20ந் தேதி முதல் இத மாடலுக்கு ப்ரீ புக்கிங் நடைபெற்று வருகின்றது.

விவோ வி15 ப்ரோ (Vivo V15 Pro) ஸ்மார்ட்போனின் நுட்பங்கள்

6.39 அங்குல முழு எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளேவினை கொண்டு கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு அம்சத்தை பெற்றதாக வந்துள்ளது. குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 675 சிப்செட் பிராசெஸர் கொண்டு மிக விரைவாக இயக்கப்படுகின்ற இந்த மொபைல் போனில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி கொண்டிருக்கிறது. கூடுதலாக மெமரி திறனை அதிகரிக்க 512 ஜிபி மைக்ரோ எஸ்டி கார்டினை பயன்படுத்தலாம்.

கேமரா பிரிவில் பின்புறத்தில் 48 மெகாபிக்சல் , 8 மெகா பிக்சல் வைட் ஏங்கிள் கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் என மொத்தமாக மூன்று விதமான கேமரா சென்சாருடன் எல்இடி ஃபிளாஷை பெற்றிருக்கின்றது. உலகில் முதன்முறையாக பாப் அப் முறையில் அதாவது மொபைலை விட்டு மேலே எழும்பி வரும் வகையில் வழங்கப்பட்டு அதிகபட்சமாக 32 மெகாபிக்சல் செல்ஃபீ கேமரா மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என வழங்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை பின்பற்றி வெளியாகியுள்ள புதிய வி15 ப்ரோவில் 3700mAh பேட்டரி உடன் விரைவாக சார்ஜிங் ஆகின்ற வசதி கொண்டுள்ளது.

Vivo V15 Pro Specs:-
6.39-inch Super AMOLED display Snapdragon 675
6GB /128GB Expandable up to 256 GB
In-display fingerprint scanner
Android Pie 9.0
12MP(48MP)+ 8MP+ 5MP triple Rear
32MP Pop-up selfie
3700mAh battery with Dual-Engine fast charging support