விவோ வி17

விவோ ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரின் புதிய வி17 மொபைல் போனில் குவாட் கேமரா உடன் முன்புறத்தில் பஞ்ச் ஹோல் டிசைன் பெற்றதாக கேமரா கொண்டதாக விற்பனைக்கு ரூபாய் 22,990 விலையில் வெளியிடப்பட்டுள்ளது.

வி17 மொபைல் போனில் 6.38 அங்குல முழு எச்டி + 19.5: 9 விகிதம் கொண்டதாக 2340 x 1080 பிக்சலுடன் 90% ஸ்கிரீன்-டு-பாடி விகிதம் மற்றும் குறைந்தபட்ச பெசலை பெற்று சூப்பர் AMOLED நாட்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த மாடலில்  8 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி உள்ளடங்கிய சேமிப்புடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 மூலம் இயக்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்தை பின்பற்றி ஃபன்டச் ஓஎஸ் மூலம் செயல்படுகின்ற வி17 போனில் பிரைமரி கேமரா ஆப்ஷனாக 48 எம்பி முதன்மை கேமரா சென்சாருடன் 8 எம்பி அல்ட்ரா வைட் ஏங்கிள் சென்சார், 2 எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் 2 எம்பி டெப்த் சென்சாரையும் பெற்றுள்ளது. வீடியோ அழைப்புகள் மற்றும் செல்ஃபீ படங்களுக்கு 32 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

கைரேகை சென்சார் ஆதரவுடன் இணைப்பு விருப்பங்களாக டூயல் சிம், டூயல்-பேண்ட் வை-ஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ் ஆகியவற்றுடன் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் மூலம் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 4500 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது.

வி17

விவோ வி 17 போன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் விலை ரூ .22,990 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட், அமேசான் இந்தியா, விவோவின் சொந்த இ-ஸ்டோர் மற்றும் பிற ஆஃப்லைன் சில்லறை கடைகள் வழியாக வாங்குவதற்கு கிடைக்கும். இந்த தளங்களில் இருந்து இந்த சாதனம் டிசம்பர் 17, 2019 முதல் விற்பனைக்கு வரும். இந்நிறுவனம் தனது ஐந்து ஆண்டுகளை இந்தியாவில் வெற்றிகரமாக கடந்துள்ளதை கொண்டாடும் வகையில் வெளியிட்டுள்ளது.