ரூ.29,990 விலையில் விவோ V20 Pro விற்பனைக்கு வெளியாகிறது

நாளை அதிகாரப்பூர்வ விலை அறிவிக்கப்பட உள்ள நிலையில் விவோ V20 புரோ ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் பெற்றதாக ரூ.29,990 ஆக நிர்ணையிக்கப்பட உள்ளது. பூர்வீகா மொபைல் மற்றும் சங்கீதா மொபைல்ஸ் விற்பனையாளர்களின் ஆன்லைன் இணையதளம் மூலம் விலை கசிந்துள்ளது.

விவோ V20 புரோ ஸ்மார்ட்போன் சிறப்புகள்

நாளை விலை அறிவிக்கப்பட உள்ள நிலையில் விவோ வி20 ப்ரோ மொபைலில் 6.44 அங்குல FHD + AMOLED 1080 x 2400 பிக்சல் தீர்மானத்துடன் கூடிய டிஸ்ப்ளேவுடன் HDR10 ஆதரவை கொண்டு 5ஜி ஆதரவை வழங்கவல்ல குவால்காம் ஸ்னாப்டிராகன் 765G சிப்செட் பெற்று 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டிருக்கலாம்.

ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான ஃபன்டச் ஓஎஸ் 11 மூலம் இயக்கபட்டு, கேமரா பிரிவில் 64 எம்பி முதன்மை சென்சார், 8MP இரண்டாம் நிலை சென்சார் மற்றும் 2 எம்பி சென்சாருடன், செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 44MP லென்ஸ் 8MP இரண்டாம் நிலை சென்சாருடன் டூயல் கேமரா ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.

விவோ வி20 ப்ரோ 5ஜி, புளூடூத் 5.1, வைஃபை 802.11, மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி 2.0 உடன் 3.5 மிமீ ஆடியோ ஜாக் பெற்று 4,000mAh பேட்டரியுடன் 33 வாட்ஸ் விரைவு சார்ஜரை பெற்றிருக்கும்.