விவோ வி7 பிளஸ் இன்பினைட் ரெட் லிமிடெட் எடிஷன் அறிமுகம்இளையோரை கவரும் வகையில் மிக நேர்த்தியான இன்பினைட் ரெட் லிமிடெட் எடிஷன் என்ற பெயரில் விவோ வி7 பிளஸ் ஸ்மார்ட்போன் ரூ.21,990 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

விவோ வி7 பிளஸ் இன்பினைட் ரெட் லிமிடெட் எடிஷன்

விவோ வி7 பிளஸ் இன்பினைட் ரெட் லிமிடெட் எடிஷன் அறிமுகம்

இந்த சிறப்பு ரெட் எடிசன் மாடல் மற்ற நிறங்களான கோல்டு மற்றும் மேட் பிளாக் ஆகியவற்றுடன் ரூ.1000 கூடுதலாகவும், நீலம் மற்றும் புதிய ரெட் எடிசன் ஆகியவை ஒரே விலையில் கிடைக்கின்றது.

விவோ வி7பிளஸ் மொபைல் போன் 5.99 அங்குல முழு எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளேவைக் கொண்டு 720×1440 பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன், கார்னிங் கொரில்லா கண்ணாடி 3 பாதுகாப்பு மற்றும் 2.5டி வளைந்த கண்ணாடி அம்சங்களை கொண்டிருக்கின்றது.

ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450SOC செயலியைக் கொண்டுள்ள விவோ வி7பிளஸ் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை , அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1 நௌகட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

வி7 பிளஸ் கருவி மூன்லைட் செல்ஃபி கேமரா எனும் நுட்பத்துடன் 24 மெகாபிக்சல் சென்சார் கேமரா முன்புறத்தில் வழங்கப்பட்டுள்ள நிலையில், பின்புறத்தில் 16 மெகாபிக்சல் சென்சார் கேமரா இடம்பெற்றுள்ளது.

விவோ வி7 பிளஸ் இன்பினைட் ரெட் லிமிடெட் எடிஷன் அறிமுகம்

இளையோரை கவரும் வகையில் மிக நேர்த்தியான இன்பினைட் ரெட் லிமிடெட் எடிஷன் என்ற பெயரில் விவோ வி7 பிளஸ் ஸ்மார்ட்போன் ரூ.21,990 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

கைரேகை சென்சார்,வைஃபை, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகளை பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here