விவோ வி7 பிளஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகம்இந்தியாவில் விவோ நிறுவனத்தின் புதிய விவோ வி7 பிளஸ் ஸ்மார்ட்போன் ரூ.21,990 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டு முன்பதிவு தொடங்கியுள்ளது.

விவோ வி7 பிளஸ்

முன்புறத்தில் செல்பி படங்களை எதிர்கொள்ள 24 மெகாபிக்சல் சென்சார் கேமரா வழங்கபட்டுள்ள V7+ போனில் 3225mAh பேட்டரி திறன் கொண்டு இயக்கப்படுகின்றது.

விவோ வி7 பிளஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகம்

டிசைன் & டிஸ்பிளே

கோல்டு, மேட் கருப்பு, மற்றும் ரோஸ் கோல்டு ஆகிய மூன்று நிறங்களை பெற்ற V7+ 5.99 அங்குல முழு உயர் தெளிவுத்திறன் திரையுடன், 720×1440 பிக்சல் தீர்மானத்தை கொண்டதாக ஃபுல்வியூ திரையில் 2.5டி வளைந்த கிளாஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பெற்றதாக வந்துள்ளது.

பிராசஸர் & ரேம்

4ஜிபி ரேம் பெற்று வி7 பிளஸ் கருவியில் ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் கொண்டு இயக்கப்பட்டு 64ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு திறனுடன் அதிகபட்சமாக 256GB வரை நீட்டிக்கும் திறன் கொண்டதாக உள்ளது.

விவோ வி7 பிளஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகம்

கேமரா துறை

முன்புறத்தில் செல்பி படங்களை எதிர்கொள்ள  f/2.0 aperture, 1/2.78 சென்சார் மற்றும் மூன்லைட் குளோவ் ஆகிய அம்சங்களை கொண்ட 24 மெகாபிக்சல் சென்சார் பெற்ற கேமரா வழங்கப்பட்டுள்ளது.

பிரைமரி கேமரா பிரிவில்  f/2.0 , டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆகிய அம்சங்களை கொண்ட 16 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

விவோ வி7 பிளஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகம்

பேட்டரி

ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளத்தை பின்னணியாக பெற்ற ஃபன்டச் ஓஎஸ் பெற்ற விவோ வி7 பிளஸ் ஸ்மார்ட்போனில் 3225mAh பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்றது.

மற்றவை

160 கிராம் எடை கொண்ட வி7 பிளஸ் மொபைல்போனில் கைரேகை சென்சார்,வைஃபை, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட்இ, யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5mm ஆடியோ ஜாக் ஆகியவற்றை துனை விருப்பங்களாக பெற்றுள்ளது.

விவோ வி7 பிளஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகம்

விலை

ரூ.21,990 விலையில் வெளியிடப்பட்டுள்ள விவோ வி7 பிளஸ் மொபைல் ஃபிளிப்கார்ட் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ள நிலையில் செப்டம்பர் 15 முதல் டெலிவரி தொடங்கப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here