ரூ.35,990 விலையில் விவோ X21 மொபைல் விற்பனைக்கு வெளியானது

டிஸ்பிளேவில் கைரேகை சென்சார் கொண்ட இந்தியாவில் முதல் ஸ்மார்ட்போன் மாடலாக விவோ X21 மொபைல் போன் ரூ. 35,990 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஃபிளிப்கார்ட் வாயிலாக விவோ எக்ஸ்21 மொபைல் போன் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

விவோ X21

விவோ இந்தியா வெளியிட்டுள்ள புதிய உயர் ரக விவோ எக்ஸ் 21 போனில் இடம்பெற்றுள்ள டிஸ்பிளேவில் அமைந்துள்ள கைரைகை ஸ்கேனரை கொண்டு போனின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கபட்டுள்ள, இந்த போனில் 4K வீடியோ பதிவு செய்யும் திறன் கொண்ட கேமராவுடன் 6ஜிபி ரேம் பெற்றதாக வந்துள்ளது.

6.28 அங்குல FHD+ திரையில் 2.5D Super AMOLED  பேனலை கொண்டு 2280×1080 பிக்சரல் தீர்மானத்தை பெற்ற இந்த போன் 19:9 ஆஸ்பெக்ட் விகிதம் பெற்று மூன்றாவது தலைமுறை கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பினை பெற்று விளங்குகின்றது. குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 660 SoC கொண்டு இயக்கப்பட்டடு 6ஜிபி ரேம் பெற்று 128ஜிபி உள்ளீட்டு சேமிப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கேமரா துறையில் பின்புறத்தில் இரட்டை கேமரா செட்டப் வழங்கப்பட்டு, 12 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் சென்சார் வழங்கப்பட்டு உயர்தர படங்கள் மற்றும் வீடியோவை பதிவு செய்ய இயலும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் முன்புறத்தில் 12 மெகாபிக்சல் சென்சார் பெற்ற செல்பி கேமரா இடம்பெற்றுள்ளது.

நீக்கி முடியாத வகையிலான 3,200 mAh பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்ற விவோ எக்ஸ்21 போனில் கைரேகை சென்சார், வை-ஃபை, ப்ளூடுத் 5.0, இரட்டை சிம் கார்டு ஸ்லாட் உள்ளிட்ட வசதிகளுடன் ஆண்ட்ராய்டு ஓரியோ 8.1 இயங்குதளத்தை பின்பற்றி  Funtouch OS 4.0 பெற்றதாக கிடைக்கின்றது.

Vivo X21 மொபைல் போன் விலை ரூ. 35,990 ஆகும்.

Recommended For You