Vivo X27 Pro leaked

Vivo X27 , Vivo X27 Pro : சீனாவில் மார்ச் 19ந் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள விவோ எக்ஸ்27 மற்றும் எக்ஸ்27 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களின் பல்வேறு நுட்ப விபரங்கள் மற்றும் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. விவோ எக்ஸ்27 சீரிஸ் மாடல்களில் பாப் அப் செல்பி கேமரா மற்றும் பின்புறத்தில் மூன்று கேமரா ஆப்ஷனை கொண்டதாக அமைந்துள்ளது.

சமீபத்தில் வெளியான விவோ வி15 ப்ரோ மற்றும் வி15 மாடலை தொடர்ந்து அடுத்து வரவுள்ள புதிய விவோ எக்ஸ்27 மற்றும் விவோ எக்ஸ்27 ப்ரோ என இரு மாடல்களும் பாப் அப் செல்ஃபி கேமராவுடன் வரவுள்ள நிலையில் கூடுதலாக விவோ எஸ்1 என்ற மாடலும் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

விவோ எக்ஸ்27, எக்ஸ்27 ப்ரோ ஸ்மார்ட்போனின் விவரங்கள்

குறைந்த விலை விவோ எக்ஸ்27 மாடலில் 6.39 அங்குல சூப்பர் AMOLED திரையுடன் அமைந்துள்ள குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 சிப்செட் பெற்று 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு வசதியை கொண்டிருக்கலாம் என கருதப்படுகின்றது.

இந்த போனில் செல்ஃபி படங்களுக்கு என மேல் எழும்பிய பாப் அப் செல்ஃபி கேமராவில் 32 மெகாபிக்சல் சென்சார் இடம்பெற்றிருக்கலாம். அதே போல பின்புற கேமரா பிரிவில் மூன்று கேமரா செட்டப் பெற்றுள்ளது. 48 மெகாபிக்சல் சென்சார் , 5 எம்பி  சென்சார் மற்றும் 13 எம்பி கேமரா பெற்றிருக்கலாம் என வெளியாகியுள்ளது. இந்த போனை இயக்க 4,000mAh பேட்டரி பொருத்தப்பட்டு, இன் டிஸ்பிளே கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக உள்ளிட்ட வசதிகளை பெற்றதாக இருக்கும் என கூறப்படுகின்றது.

Vivo X27 leaked

விவோ எக்ஸ்27 ப்ரோ போனின் சிறப்புகள்

விவோ எக்ஸ்27 மாடலில் 6.7 அங்குல சூப்பர் AMOLED திரையுடன் அமைந்துள்ள குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 சிப்செட் பெற்று 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு வசதியை கொண்டிருக்கலாம்

இந்த போனில் எக்ஸ்27 போல செல்ஃபி படங்களுக்கு என மேல் எழும்பிய பாப் அப் செல்ஃபி கேமராவில் 32 மெகாபிக்சல் சென்சார் இடம்பெற்றிருப்பதுடன் கூடுதலாக எல்இடி ஃபிளாஷ் பெற்றிருக்கின்றது. அதே போல பின்புற கேமரா பிரிவில் மூன்று கேமரா செட்டப் பெற்றுள்ளது. 48 மெகாபிக்சல் சென்சார் , 5 எம்பி  சென்சார் மற்றும் 13 எம்பி கேமரா பெற்றிருக்கலாம் என வெளியாகியுள்ளது. இந்த போனை இயக்க மிக விரைவாக சார்ஜிங் ஆகின்ற அம்சத்தை பெற்ற 4,000mAh பேட்டரி பொருத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது.

விவோ எஸ்1

விவோ வி15 என வெளியிடபட்ட மாடலை சீனாவில் விவோ எஸ்1 என்ற பெயரில் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.