விவோ எக்ஸ்27 , விவோ எக்ஸ்27 புரோ
 

சீனாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய விவோ எக்ஸ்27 மற்றும் விவோ எக்ஸ்27 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்கள் பாப் அப் செல்ஃபி கேமரா உடன் , இன் டிஸ்பிளே கைரேகை சென்சார் பெற்றதாக மூன்று கேமரா கொண்டதாக வந்துள்ளது.

விவோ எக்ஸ்27 மாடலில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதியின் விலை (RMB 3,198) ரூபாய் 32,000 , 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு வசதியை கொண்ட மாடல் விலை (RMB 3,598) ரூபாய் 36,000 மற்றும் புரோ மாடலாக விளங்கும் விவோ எக்ஸ்27 புரோ 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு வசதியுடன் (RMB 3,998) ரூபாய் 40,000 ஆகும்.

விவோ எக்ஸ்27, எக்ஸ்27 ப்ரோ விலை மற்றும் சிறப்புகள்

இரு மாடல்களும் மிக நேர்த்தியான வடிவமைப்புடன் பின்புறத்தில் பிரைமரி கேமரா சென்சார் 48 மெகாபிக்சல் , 8 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் செயற்க்கை அறிவுத்திறனை பெற்ற 13 மெகாபிக்சல் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

பாப் செல்ஃபி கேமரா முறையை பெற்றுள்ள எக்ஸ்27 போனில் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா மற்றும் எக்ஸ்27 ப்ரோ மாடலில் 32 மெகாபிக்சல் டூயல் எல்இடி ஃபிளாஷ் பெற்றதாக உள்ளது. இந்த மாடல் 6.7 அங்குல திரையை பெற்று குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 சிப்செட் கொண்டு 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பை பெற்றுள்ளது.

விவோ X27 மாடலில் 6.39 அங்குல திரையை பெற்று குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 சிப்செட் கொண்டு 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு மற்றும்  பெற்றுள்ளது. ஸ்னாப்டிராகன் 675 பெற்று 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு கொண்டதாக உள்ளது.

விவோ X27 , விவோ X27 ப்ரோ என இரு மாடல்களிலும் 22.5w ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் 4000mAh பேட்டரியுடன் ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்தில் செயல்படுகின்றது. இந்திய அறிமுகம் குறித்து எந்த தகவலும் இல்லை.

விவோ எக்ஸ்27 , விவோ எக்ஸ்27 ப்ரோ

Vivo X27 specifications

 • 6.39-inch (2340 × 1080 pixels) முழு HD+ 19.5:9 ஆஸ்பெக்ட் விகிதம் AMOLED திரை
 • 2GHz ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 675 64-bit 11nm உடன் கூடிய Adreno 612 GPU
 • 256 ஜிபி மாடல் ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 710 10nm உடன் (Dual 2.2GHz Kryo 360 + Hexa 1.7GHz Kryo 360 CPUs) Adreno 616 GPU
 • 8GB ரேம், 128GB மற்றும் 256GB சேமிப்பு வசதி
 • ஆண்ட்ராய்டு 9.0 (Pie) உடன் Funtouch OS 9
 • இரு சிம் கார்டு
 • 48MP ரியர் கேமரா,  5MP டெப்த் சென்சார், 13MP AI 120-டிகிரி சூப்பர் ஒயைட் ஏங்கிள் லென்ஸ்
 • 16MP செல்ஃபி கேமரா
 • இன் டிஸ்பிளே கைரேகை சென்சார்
 • 3.5 mm ஆடியோ ஜாக்
 • அளவுகள்: 157.66×74.26×8.95mm; எடை: 188g
 • டூயல் 4G VoLTE, ஒய்-ஃபை 802.11 ac dual-band, ப்ளூடுத் 5, GPS/GLONASS, யூஎஸ்பி டைப் சி போர்ட்
 • 22.5w ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் 4000mAh பேட்டரி

Vivo X27 Pro specifications

 • 6.7-inch முழு HD+ 20.5:9 ஆஸ்பெக்ட் விகிதம் சூப்பர் AMOLED திரை
 • ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 710 10nm உடன் (Dual 2.2GHz Kryo 360 + Hexa 1.7GHz Kryo 360 CPUs) Adreno 616 GPU
 • 8GB ரேம், 256GB சேமிப்பு வசதி
 • ஆண்ட்ராய்டு 9.0 (Pie) உடன் Funtouch OS 9
 • இரு சிம் கார்டு
 • 48MP ரியர் கேமரா,  5MP டெப்த் சென்சார், 13MP AI 120-டிகிரி சூப்பர் ஒயைட் ஏங்கிள் லென்ஸ்
 • பாப் அப் செல்பி 32MP டூயல் எல்இடி ஃபிளாஷ்
 • இன் டிஸ்பிளே கைரேகை சென்சார்
 • 3.5 mm audio jack, AK377A Smart Amp
 • டூயல் 4G VoLTE, ஒய்-ஃபை 802.11 ac dual-band, ப்ளூடுத் 5, GPS/GLONASS, யூஎஸ்பி டைப் சி போர்ட்
 • 22.5w ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் 4000mAh பேட்டரி