விரைவில்.., இந்தியாவில் விவோ X50 சீரிஸ் அறிமுக விபரம்

விவோ நிறுவனத்தின் அடுத்த அறிமுகமாக இந்திய சந்தையில் X50 சீரிஸ் வரிசையில் உள்ள X50 மற்றும் X50 புரோ என இரு மாடல்களும் வெளியிடப்பட உள்ளது. சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த வரிசையில் கூடுதலாக X50 புரோ+ இடம்பெற்றுள்ளது.

விவோவின் இந்தியப் பிரிவு தலைவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலின் மூலம் இந்த மொபைல் அறிமுகம் குறித்தான தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அறிமுக தேதி தற்போது வெளியாகவில்லை. ஸ்னாப்டிராகன் 765ஜி சிப்செட் பெற்றுள்ள இந்த மாடல்கள் 5ஜி சேவைக்கான ஆதரவு பெற்றதாகும். இதில் உள்ள எக்ஸ் 50 புரோ+ மாடல் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் கொண்டுள்ளது.

விவோ X50 சீரிஸ்

ஆரம்ப நிலை விவோ எக்ஸ் 50 மொபைல் போனில்  6.56 அங்குல் திரை பெற்று AMOLED தட்டையான திரை கொண்டதாக அமைந்துள்ளது. இந்த மாடலில் ஸ்னாப்டிராகன் 765G சிப்செட் பெற்றுள்ளது. முதன்மையான கேமரா பிரிவில் 48 மெகாபிக்சல் சோனி IMX598 சென்சாருடன் அமைந்துள்ளது. கூடுதலாக 13 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஏங்கிள் சென்சார், 8 மெகாபிக்சல் டெலிபோட்டோ லென்ஸ் மற்றும் மேக்ரோ சென்சார் இடம்பெற்றுள்ளது.

செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு முன்புறத்தில் 32 எம்பி சென்சார் உள்ளது. அடுத்தப்படியாக 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4200mAh பேட்டரி உள்ளது.

விவோ எக்ஸ் 50 புரோ

விவோ எக்ஸ் 50 புரோ மொபைல் போனில் 6.5 அங்குல் திரை OLED திரை கொண்டதாக அமைந்துள்ளது. இந்த மாடலில் ஸ்னாப்டிராகன் 765G சிப்செட் பெற்றுள்ளது. முதன்மையான கேமரா பிரிவில் 48 மெகாபிக்சல் சோனி IMX598 சென்சாருடன் அமைந்துள்ளது. கூடுதலாக 13 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஏங்கிள் சென்சார், 8 மெகாபிக்சல் டெலிபோட்டோ லென்ஸ் மற்றும் 8 மெகாபிக்சல் பெரிஸ்கோப் சென்சார் இடம்பெற்றுள்ளது.

செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு முன்புறத்தில் 32 எம்பி சென்சார் உள்ளது. அடுத்தப்படியாக 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4315mAh பேட்டரி உள்ளது.

விரைவில்.., இந்தியாவில் விவோ X50 சீரிஸ் அறிமுக விபரம்

விவோ எக்ஸ் 50 புரோ +

உயர் ரக விவோ எக்ஸ் 50 புரோ+ மாடலில் 6.5 அங்குல் திரை OLED திரையுடன் 1080 x 2376 பிக்சல் தீர்மானத்தை கொண்டதாக அமைந்துள்ளது. இந்த மாடலில் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் உடன் 8ஜிபி மற்றும் 12ஜிபி ரேம் பெற்றுள்ளது. முதன்மையான கேமரா பிரிவில் 50 மெகாபிக்சல் சாம்சங் ISOCELL GN1 1/1.3 சென்சாருடன் அமைந்துள்ளது. கூடுதலாக 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஏங்கிள் சென்சார், 13 மெகாபிக்சல் டெலிபோட்டோ லென்ஸ் மற்றும் 8 மெகாபிக்சல் பெரிஸ்கோப் சென்சார் இடம்பெற்றுள்ளது.

செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு முன்புறத்தில் 32 எம்பி சென்சார் உள்ளது. அடுத்தப்படியாக 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4350mAh பேட்டரி உள்ளது.

விவோ எக்ஸ் 50 சீரிஸ் விலை பட்டியல்

Vivo X50 8 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு – ஆர்எம்பி 3,498 (தோராயமாக ரூ. 37,000)

Vivo X50 8 ஜிபி ரேம் +256 ஜிபி சேமிப்பு – ஆர்எம்பி 3,898 (தோராயமாக ரூ .41,250)

Vivo X50 Pro 8 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு – ஆர்எம்பி 4,298 (சுமார் ரூ .45,500)

Vivo X50 pro 8 ஜிபி ரேம் +256 ஜிபி சேமிப்பு – ஆர்எம்பி 4,698 (சுமார் ரூ .49,750)

விவோ எக்ஸ் 50 ப்ரோ + 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் விலை ஆர்எம்பி 4,998 (ரூ. 53,000),

விவோ எக்ஸ் 50 ப்ரோ + 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் விலை ஆர்எம்பி 4,298 (சுமார் ரூ. 58,250)

விவோ எக்ஸ் 50 ப்ரோ + டாப்-எண்ட் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் பதிப்பின் விலை ஆர்எம்பி 5,998 (தோராயமாக ரூ. 63,500).