vivo y17

குறைந்த விலையில் டிரிப்ள் கேமரா ஏஐ சென்சார் ஆப்ஷனுடன் விவோ Y17 ஸ்மார்ட்போன் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. முன்பாக இந்த ஸ்மார்ட்போன் விவோ Y5 என அறியப்பட்டு வந்த நிலையில், தற்போது விவோ ஒய்17 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் ஆதரவை பெற்ற விவோ ஒய்17 போனில் அதிவேக சார்ஜிங் அம்சத்துடன் கூடிய  5,000mAh பேட்டரி பொருத்தப்பட்டிருக்கலாம்.

விவோ Y17 மொபைல் போன் விலை மற்றும் சிறப்புகள்

விவோ ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் தொடர்ந்து பல்வேறு நவீன அம்சங்களை உள்ளடக்கிய மொபைல்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியிட்டு வருகின்றது. குறிப்பாக இந்நிறுவனத்தின் விவோ வி15, வி15 ப்ரோ மொபைல்கள் பாப் அப் செல்ஃபி கேமராவுடன் அமைந்திருக்கின்றது.

புதிதாக விற்பனைக்கு வரவுள்ள விவோ Y17 போனில் மிக வேகமாக சார்ஜிங் ஆகின்ற 5,000mAh பேட்டரி உடன் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்துடன் கூடியதாக அமைந்திருக்கும். செங்குத்தான நிலையில் டிரிப்ள் கேமரா செட்டப் பெற்று முன்புறத்தில் செல்ஃபி கேமரா அமைந்துள்ளது. 6.35 அங்குல டிஸ்பிளே உடன் கூடிய இந்த போனில் மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் உடன் 4ஜிபி ரேம் உடன் அமைந்துள்ளது.

பட உதவி – 91மொபைல்ஸ்