விவோ Y17

ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் ஆதரவை பெற்ற டிரிப்ள் கேமரா கொண்ட விவோ Y17 ரூபாய் 17,990 விலையில் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக ஆஃப்லைன் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றது.

ஒய்17 போனில் 18 வாட்ஸ் டூயல் என்ஜின் அதிவேக சார்ஜிங் அம்சத்துடன் கூடிய 5,000mAh பேட்டரி பொருத்தப்பட்டு சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்த உதவுகின்றது. பின்புறத்தில் கைரேகை சென்சார் அமைந்துள்ளது.

விவோ Y17 சிறப்புகள்

நீலம் மற்றும் பர்பிள் என இரு நிறங்களில் கிடைக்கின்ற விவோ Y17 போனில் அதிகபட்சமாக 5000mAh பேட்டரி, செயற்கை நுண்ணறிவு சார்ந்த கேமரா உள்ளிட்ட அம்சங்கள் மிகவும் கவனிக்கதக்கதாக விளங்குகின்றது.

இந்த மொபைலில் 6.35 அங்குல (1544×720 பிக்சல்) HD பிளஸ் உடன் 19.3:9 IPS 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்பிளே கொண்டு, 2.3GHz ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலீயோ P35 சிப்செட் கொண்டு ஆண்ட்ராய்டு 9 இயங்குதளத்தை பின்பற்றி ஃபன்டச் ஓஎஸ் மூலம் செயல்படுகின்றது.

4ஜிபி ரேம் உடன் 128 ஜிபி உள் சேமிப்பு மற்றும் அதிகபட்சமாக 256 ஜிபி வரையிலான மைக்ரோ எஸ்டி கார்டின் ஆதரவை வழங்குகின்ற இந்த விவோ ஒய் 17 போனில் டிரிப்ள் கேமரா வசதி கொண்டிருக்கின்றது.

13 மெகாபிக்சல் ரியர் கேமரா சென்சார் எல்இடி ஃபிளாஷ், f/2.2 aperture, 2 மெகாபிக்சல் செக்ன்ட்ரி கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஏங்கிள் லென்ஸ், f/2.2 aperture பெற்றதாகவும், செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 16 மெகாபிக்சல் சென்சார் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Vivo Y17 specifications

 • 6.35 அங்குல (1544×720 pixels) HD+19.3:9 IPS 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்பிளே
 • 2.3GHz ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலீயோ P35 (MT6765) 12nm Processor with IMG PowerVR GE8320 GPU
 • 4GB RAM, 128GB உள் சேமிப்பு, 256GB வரையில் மைக்ரோஎஸ்டி கார்டு
 • இரட்டை சிம்
 • Funtouch OS 9 ஆண்ட்ராய்டு 9.0 (Pie)
 • 13MP ரியர் கேமரா சென்சார் எல்இடி ஃபிளாஷ், f/2.2 aperture, 2MP செக்ன்ட்ரி கேமரா, 8MP அல்ட்ரா வைட் ஏங்கிள் லென்ஸ், f/2.2 aperture
 • 16MP முன்பக்க கேமரா
 • கைரேகை சென்சார்
 • அளவுகள்: 159.43 × 76.77 × 8.92mm ; எடை: 190.5g
 • டூயல் 4G VoLTE, வை-ஃபை 802.11 ac (2.4+5GHz), ப்ளூடூத் 5.0, GPS + GLONASS
 • 5000mAh பேட்டரியுடன் 18W டூயல் என்ஜின் ஃபாஸ்ட் சார்ஜ்

ரூ.17,990 விலையில் விவோ Y17 இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்