விவோ Y20 மற்றும் விவோ Y20i விற்பனைக்கு வெளியானது

விவோ ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரின் பட்ஜெட் விலையில் இளைய தலைமுறையினரை கவரும் வகையில் விவோ Y20 மற்றும் விவோ Y20i என இரு மாடல்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. வருகின்ற ஆகஸ்ட் 28 ஆம் தேதி முதல் விவோ இந்தியா இணையதளம் மற்றும் முன்னணி இ-காமர்ஸ் தளங்களில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள விவோ ஒய் வரிசை மொபைல்களில் மிக சிறப்பான வகையில் தொழில்நுட்பத்தை அனுகும் வகையிலான வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.

விவோ Y20 மற்றும் விவோ Y20i சிறப்புகள்

Y20 மற்றும் Y20i என இரண்டு மாடல்களும் HD+ 720 x 1600 பிக்சல் தீர்மானம் கொண்டு 20: 9 விகிதத்துடன் 6.51 அங்குல ஹாலோ ஐவியூ டிஸ்ப்ளே கொண்டுள்ளது. 3 ஜிபி அல்லது 4 ஜிபி ரேம் உடன் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 460 சிப்செட் கொண்டு இயக்கப்பட்டு ஆண்டராய்டு 10 இயங்குதளத்தை பின்பற்றி ஃபன்டச் ஓஎஸ் 10.5 கொண்டுள்ளது.

கேமரா பிரிவில் பிரைமரி ஆப்ஷனில், மூன்று கேமரா அமைப்பில் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் உள்ளன. செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்பிற்கு ஏஐ ஆதரவை பெற்ற 8 எம்பி கேமரா இடம்பெற்றுள்ளது.

கடுதலாக இடம்பெற்றுள்ள வசதிகளில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் மற்றும் கேமரா அடிப்படையிலான முகம் மூலம் திறக்கும் வசதி இணைப்பு விருப்பங்களில் மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட், டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் 5.0, எஃப்எம் ரேடியோ போன்றவை உள்ளது. 18W விரைவு சார்ஜிங் வசதியுடன் 5000mAh பேட்டரி உள்ளது.

விவோ Y20 வரிசை விலை பட்டியல்

விவோ Y20 போனில் 4 ஜிபி + 64 ஜிபி சேமிப்பு மாடலின் விலை ரூ.12,990 ஆக நிர்ணையிக்கப்பட்டு, ஆகஸ்ட் 28 ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும்.  அடுத்ததாக, செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் விவோ Y20i  மொபைலின் 3 ஜிபி + 64 ஜிபி மாடல் ரூ.11,490 விலையில் விற்பனைக்கு கிடைக்கும். வாங்குவதற்கு விவோ இந்தியா இணையதளம் மற்றும் முன்னணி இ-காமர்ஸ் தளங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.