ரூ.13,990 விலையில் 6ஜிபி ரேம் பெற்ற Vivo Y20 விற்பனைக்கு வந்தது

பட்ஜெட் விலையில் கிடைக்கின்ற விவோ Y20 ஸ்மார்ட்போனில் கூடுதலாக 6 ஜிபி ரேம் உடன் 64 ஜிபி ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு ரூ.13,990 விலையில் வெளியிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 24 ஆம் தேதி முதல் விவோ இந்தியா இணையதளம் மற்றும் முன்னணி ஸ்டோர்களில் கிடைக்கும்.

விவோ Y20 ஸ்மார்ட்போன் HD+ 720 x 1600 பிக்சல் தீர்மானம் கொண்டு 20: 9 விகிதத்துடன் 6.51 அங்குல ஹாலோ ஐவியூ டிஸ்ப்ளே கொண்டுள்ளது.  4 ஜிபி ரேம் உடன் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 460 சிப்செட் கொண்டு இயக்கப்பட்டு ஆண்டராய்டு 10 இயங்குதளத்தை பின்பற்றி ஃபன்டச் ஓஎஸ் 10.5 கொண்டுள்ளது.

கேமரா பிரிவில் பிரைமரி ஆப்ஷனில், மூன்று கேமரா அமைப்பில் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் உள்ளன. செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்பிற்கு ஏஐ ஆதரவை பெற்ற 8 எம்பி கேமரா இடம்பெற்றுள்ளது.

பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் மற்றும் கேமரா அடிப்படையிலான முகம் மூலம் திறக்கும் வசதி இணைப்பு விருப்பங்களில் மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட், டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் 5.0, எஃப்எம் ரேடியோ போன்றவை உள்ளது. 18W விரைவு சார்ஜிங் வசதியுடன் 5000mAh பேட்டரி உள்ளது.

விவோ Y20 4 ஜிபி + 64 ஜிபி சேமிப்பு விலை ரூ.12,990

விவோ Y20 6 ஜிபி + 64 ஜிபி சேமிப்பு விலை ரூ.13,990

விவோ Y20 மற்றும் விவோ Y20i விற்பனைக்கு வெளியானது