ரூ.14,990 விலையில் விவோ Y30 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது

இன்றைக்கு இரவு 8 மணிக்கு ஃபிளிப்கார்ட் மூலமாக விற்பனைக்கு கிடைக்க உள்ள விவோ Y30 ஸ்மார்ட்போனில் 5,000mAh பேட்டரியுடன் பஞ்ச் ஹோல் டிசைன் பெற்று குவாட் கேமரா ஆப்ஷனை கொண்டதாக அமைந்துள்ளது.

Y30 ஸ்மார்ட்போனில் 6.47 அங்குல HD+ (720×1560 பிக்சல்ஸ்) தீர்மானத்துடன் எல்சிடி டிஸ்பிளேவினை பெற்று ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ P35 (MT6765) சிப்செட் பெற்று 4GB ரேம் உடன் 128GB சேமிப்பை கொண்டதாக அமைந்துள்ளது. இந்த மாடலில் நீலம், கருப்பு நிறத்தை பெற்று பின்புறத்தில் கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது.

பிரைமரி கேமரா ஆப்ஷனை பொறுத்தவரை, 13 மெகாபிக்சல் சென்சார், 8 எம்பி அல்ட்ரா வைட் ஏங்கிள் லென்ஸ் உடன் 2 எம்பி டெப்த் சென்சாருடன் கூடுதலாக 2 எம்பி மேக்ரோ சென்சாரை கொண்டுள்ளது. செயற்கை அறிவுத்திறன் ஆதரவுடன் கூடிய 8 எம்பி சென்சார் கொண்டுள்ளது.

5,000 எம்ஏஎச் பேட்டரியை பெற்று இணைப்பு விருப்பங்களில் 4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், எஃப்எம் ரேடியோ, யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவை அடங்கும்.