விரைவில்.., இந்தியாவில் விவோ Y50, விவோ Y30 அறிமுக விபரம்

விவோ ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரின் ரூ.20,000 விலைக்குள் வரவுள்ள இரண்டு மாடல்களான விவோ Y50 மற்றும் விவோ Y30 ஸ்மார்ட்போன்களின் விபரம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இரு மாடல்களும் அடுத்த வாரத்தில் விற்பனைக்கு கிடைக்கலாம்.

விவோ Y50

ரூ.17,990 விலையில் எதிர்பார்க்கப்படுகின்ற விவோ Y50 ஸ்மார்ட்போன் கம்போடியாவில் முன்பே விற்பனைக்கு கிடைத்து வருகின்றது. அதன் அடிப்படையில் ஓய் 50 மாடலில் 6.53 அங்குல முழு HD+ திரையுடன் பஞ்ச் ஹோல் டிசைன் பெற்றதாகவும், ஸ்னாப்டிராகன் 665 SoC பெற்று அதிகபட்சமாக 8 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி சேமிப்பு கொண்டிருக்கும்.

குவாட் கேமரா செட்டப் பெற்ற விவோ ஓய் 50 மாடலில் பிரைமரி சென்சார் 13 மெகாபிக்சல், 8 எம்பி அல்ட்ரா வைட் ஏங்கிள் லென்ஸ், கூடுதலாக 2 எம்பி மேக்ரோ சென்சார், 2 எம்பி போட்ராய்ட் ஷூட்டரை கொண்டிருக்கின்றது.

செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 8 எம்பி கேமரா பெற்றிருக்கலாம். மேலும் 5,000mAh பேட்டரியுடன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை கொண்டிருக்கும்.

விவோ Y30

ரூ.15,000 க்கு குறைவான விலையில் வரவுள்ள விவோ ஓந் 30 மாடலில் 6.47 அங்குல முழு HD (720×1560 பிக்சல் திரையுடன் பஞ்ச் ஹோல் டிசைன் பெற்றதாகவும், மீடியாடெக் ஹீலியோ  P35 (MT6765) Soc பெற்று அதிகபட்சமாக 4 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி சேமிப்பு கொண்டிருக்கும்.

குவாட் கேமரா செட்டப் பெற்ற விவோ ஓய் 50 மாடலில் பிரைமரி சென்சார் 13 மெகாபிக்சல், 8 எம்பி அல்ட்ரா வைட் ஏங்கிள் லென்ஸ், கூடுதலாக 2 எம்பி மேக்ரோ சென்சார், 2 எம்பி போட்ராய்ட் ஷூட்டரை கொண்டிருக்கின்றது.

செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 8 எம்பி கேமரா பெற்றிருக்கலாம். மேலும் 5,000mAh பேட்டரியுடன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் 5 வாட்ஸ் ரிவர்ஸ் சார்ஜிங் கூடுதலாக கொண்டிருக்கும்.

விரைவில்.., இந்தியாவில் விவோ Y50, விவோ Y30 அறிமுக விபரம்

இரு ஸ்மார்ட்போன்களும் விரைவில் விற்பனைக்கு வெளியாக உள்ளன.

source – 91 mobiles