8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது

விவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Vivo Y51 சிறப்புகள்

விவோ ஒய்51 மொபைலில் 6.5 அங்குல முழு எச்டி+ எல்சிடி திரையுடன் 20:9 ஆஸ்பெக்ட் விகிதத்துடன் 2408 × 1080 பிக்சல் தீர்மானத்தை கொண்டுள்ள குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் பெற்று 8 ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க சேமிப்புடன் கூடுதலாக 1TB விரிவுப்படுத்தக்கூடிய எஸ்டி கார்டை பயன்படுத்தலாம்.

இந்த போனில் பிரைமரி ஆப்ஷனில் 48 எம்பி, 8 எம்பி வைட் ஏங்கிள் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் குவாட் கேமரா ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் 16 எம்பி கேமரா f/2.0 துளை பெற்ற செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு கிடைக்கின்றது.

பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சாருடன், 5000mAh பேட்டரியுடன் 18W விரைவு சார்ஜிங் வசதியை கொண்டுள்ளது. டூயல் சிம் கார்டு வசதியுடன் 4G VoLTE, Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz), ப்ளூடூத் 5, GPS/ GLONASS/ Beidou, யூஎஸ்பி Type-C ஆகியவற்றை பெற்றுள்ளது.

விவோ ஒய்51 மாடல் டைட்டானியம் சபையர் மற்றும் கிரிஸ்டல் சிம்பொனி வண்ணங்களில்  பிளிப்கார்ட், அமேசான் மற்றும் விவோ இந்தியா இ-ஸ்டோரிலிருந்து விற்பனைக்கு கிடைக்கின்றது.