விவோ Y91 போன் மாடலுக்கு அதிரடி விலை குறைப்பு

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற விவோ Y91 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலை 1000 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. விவோ வ்யை91 தற்போது ரூபாய் 9,990க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த மொபைல் போன் பிளிப்கார்ட், அமேசான், விவோ ஸ்டோர், மற்றும் பேடிஎம் தற்போது விற்பனை செய்யப்புகின்ற நிலையில் இந்த விரை குறைப்பு  சியோமி மற்றும் ரியல்மி நிறுவன மொபைல்களுக்கு சவாலினை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கபடுகின்றது.

விவோ Y91 விவரக்குறிப்புகள் மற்றும் சிறப்புகள்

இந்த மொபைல் போன் ஜனவரி மாதம் விற்பனைக்கு வந்த நிலையில், தற்போது விலையை குறைத்துள்ள விவோ நிறுவனம், வ்யை91 போனில்  6.22 அங்குல எச்டி பிளஸ் டிஸ்பிளே அமைப்பினை வாட்டர் டிராப் வடிவமைப்பைக் கொண்டதாக 720 x 1520 பிக்சல் தீர்மானம் பெற்று நேர்தியான அமைப்பினை பெற்றுள்ளது.

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை பின்பற்றி ஃபன்டச் ஓஎஸ் மூலம் செயல்படுகின்ற விவோ Y91 போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி2 சிப்செட் பெற்று 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்க மெமரி பெற்றதாக விளங்குகின்றது. இந்த போனில் மைக்ரோ எஸ்டி அட்டை மூலம் சேமிப்பை அதிகரிக்கலாம்.

விவோ Y91 போன் மாடலுக்கு அதிரடி விலை குறைப்பு

4,030mAh  பேட்டரி கொண்டு செயல்படுகின்ற விவோ வ்யை91 போனில் பிரைமரி கேமரா தேர்வில் 13எம்பி+ 2எம்பி சென்சாருடன் டூயல் ரியர் கேமரா பெற்றுள்ளது. செல்பீ மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள  8 மெகா பிக்சல் சென்சாரை கொண்டுள்ளது. மேலும் சிறப்பான படங்கள் மற்றும் வீடியோவை பெற செயற்கை அறிவுத்திறன் சேர்க்கப்பட்டுள்ளது.

4ஜி, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ்,  3.5mm ஹெட்போன் ஜாக் ஆகியவற்றை பெற்றுள்ள விவோ Y91  ஸ்மார்ட்போன் விலை ரூபாய் 9,990 ஆகும்.