13 எம்பி ரியர் கேமரா செட்டப் பெற்ற விவோ Y91i (Vivo Y91i) ஸ்மார்ட்போன் மாடல் 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட மாடல் 7,990 ரூபாய் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. ஆஃபலைன் மூலம் விற்பனை செய்யப்படுகின்றது.
அதிகார்வப்பூர்வமாக வெளியிட்டுள்ள குறிப்பில் , இந்தியாவில் Vivo Y91i போனில் 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி சேமிப்பு மற்றும் 32 ஜிபி சேமிப்பு என இரு விதமான மாறுபாட்டில் கிடைக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் விவோ வைய்91ஐ 32 ஜிபி சேமிப்பு மற்றும் 2 ஜிபி ரேம் பெற்ற மாடல் விலை 8,490 ரூபாய்க்கு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Vivo Y91i: போனின் நுட்பங்கள் மற்றும் சிறப்புகள்
மலேசியா மற்றும் தாய்லாந்து நாடுகளிலன் அதிகார்வப்பூர்வ விவோ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விவரக்குறிப்புகளை தொடர்ந்து இந்தியாவில் மாறுபட்ட அம்சத்தை கொண்டு Y91i ஸ்மார்ட்போன் விபரங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க – சமீபத்தில் விவோ Y91 மொபைல் விலை ரூ.1000 குறைக்கப்பட்டது.
6.22 அங்குல காட்சி திரையை ஹெச்டி பிளஸ் அம்சத்துடன் ஐபிஎஸ் திரையை கொண்டு வாட்டர் டிராப் டிஸ்பிளே வடிவத்தை பெற்றதாகவும், 720×1520 பிக்சல்ஸ் தீர்மானத்தையும் கொண்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை பின்பற்றி வந்துள்ள வைய்91ஐ போனை இயக்குவதற்கு மீடியாடெக் Helio P22 SoC பயன்படுத்தப்பட்டு 2 ஜிபி ரேம் கொண்டு 16 ஜிபி சேமிப்பு மற்றும் 32 ஜிபி சேமிப்பை கொண்டுள்ளது. மைக்ரோ எஸ்டி அட்டை மூலம் விரிவுப்படுத்தலாம்.
கேமரா பிரிவில் Vivo Y91i போனில் டூயல் கேமரா செட்டப் பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ளது. 13 மெகாபிக்சல்ஸ் பிரைமரி எல்இடி ஃபிளாஷ் இணைக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளை எதிர்கொள்ள 5 மெகாபிக்சல் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு சார்ந்த கைரேகை அம்சம் பின்புறத்தில் வழங்கப்பட்டு கூடுதல் விருப்பங்களாக, 4G எல்டிஇ, வை-ஃபை, ப்ளூடூத் v5.0, GPS/ A-GPS, மைக்ரோ யூஎஸ்பி, மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் உள்ளது. Vivo Y91i போனை இயக்க 4,030 மில்லி ஆம்பியர் ஹவர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
விவோ Y91i 2 ஜிபி ரேம் + 16 ஜிபி சேமிப்பு – ரூபாய் 7900
விவோ Y91i 2 ஜிபி ரேம் + 32 ஜிபி சேமிப்பு – ரூபாய் 8490