vivo Z1 pro

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய விவோ இசட்1 ப்ரோ (Vivo Z1 Pro) ஸ்மார்ட்போன் மாடலின் ஆரம்ப விலை ரூ.14,990 என தொடங்குகின்றது. 4ஜிபி ரேம் , 6ஜிபி ரேம் என இரு விதமாக மாறுபட்டு கிடைக்க தொடங்கியுள்ளது. வரும் ஜூலை 11 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் மற்றும் விவோ தளத்தில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் பல்வேறு விதமான டர்போ மோட்கள் வழங்கப்பட்டுள்ளது. அவை சென்டர் டர்போ, AI டர்போ, நெட் டர்போ, கூலிங் டர்போ மற்றும் கேம் டர்போ ஆகும். இவற்றில் கேமிங் டர்போ மோட் வாயிலாக 4D முறையில் மிக சிறப்பான முறையில் கேமிங் சார்ந்த பல்வேறு மேம்பாடுகளை வழங்குவதாக அமைந்திருக்கும்.

Vivo Z1 Pro மொபைல் போனின் நுட்பம் பின் வருமாறு;- 6.53 முழு அங்குல ஹெச்டி பிளஸ் பஞ்ச் ஹோல் டிஸ்பிளேவுடன் ஸ்கீரின் பாடி டூ விகிதம் 90.77 சதவிகிதம் கொண்டிருப்பதுடன், ஸ்னாப்டிராகன் 712 சிப்செட் பெற்று 4 ஜிபி ரேம், 6 ஜிபி ரேம் உடன் 64 ஜிபி சேமிப்பு மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி கொண்டதாக அமைந்திருக்கின்றது.

பிரைமரி கேமரா ஆப்ஷனில் டிரிப்ள் கேமரா செட்டப் இடம்பெற்றிருக்கும். இதில் 16 மெகாபிக்சல் சோனி IMX499 சென்சாருடன், 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஏங்கிள் லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் என மூன்று கேமராவுடனும், செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என 16 மெகாபிக்சல் சென்சார் பெற்றிருக்கின்றது.

ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டு FuntouchOS இயங்குதளத்தில் செயல்படுவதுடன் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் 5,000mAh  பேட்டரியை கொண்டதாக வரவுள்ளது.

விவோ இசட் 1 ப்ரோ சோனிக் ப்ளூ, சோனிக் பிளாக் மற்றும் மிரர் பிளாக் வண்ணங்களில் வந்துள்ளது. இதன 4 ஜிபி ரேம் 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ. 14,990 எனவும், 6 ஜிபி ரேம் 64 ஜிபி ஸ்டோரேஜ் பதிப்பைக் கொண்ட மாடல் ரூ. 16,990 மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் பதிப்பைக் கொண்ட உயர் ரக 6 ஜிபி ரேம் பெற்றுள்ள மாடல் ரூ. 17990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது பிளிப்கார்ட் மற்றும் விவோ.காம் தளத்தில் ஜூலை 11 முதல் கிடைக்கும்.