விவோ Z10 மூன்லைட் செல்பி கேமரா மொபைல் விற்பனைக்கு வெளியானது

விவோ நிறுவனம் மிக சிறப்பான வகையில் இரவு நேரங்களில் செல்பி படங்ளை சிறப்பாக பெறும் வகையில் மூன்லைட் செல்பி ஃபிளாஷ் கொண்ட 24 மெகாபிக்சல் கேமரா கொண்ட விவோ Z10 மொபைல் போனை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

தற்போது ஆஃப்லைன் வழியாக தமிழகம், கர்நாடகா, ஆந்திரபிரதேசம், மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ள விவோ Z10 மொபைல் விலை விபரம் பற்றி எந்த தகவலையும் இந்நிறுவனம் வெளியிடாத நிலையில் விற்பனைக்கு கிடைப்பதாக தனது இணையத்தில் குறிப்பிட்டுள்ளது.

விவோ Z10 மொபைல் போன் 6 அங்குல HD+ திரையை பெற்று 18:9 ஆஸ்பெக்ட் விகிதம் கொண்ட மொபைலில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் கொண்டு இயக்கப்பட்டு 4ஜிபி ரேம் மற்றும் உள்ளீட்டு சேமிப்பில் 32 ஜிபி கொண்டதாக அமைந்துள்ளது.

விவோ Z10 மூன்லைட் செல்பி கேமரா மொபைல் விற்பனைக்கு வெளியானது

இரட்டை சிம் கார்டு ஆதரவை பெற்ற இந்த போனில் கூடுதல் சேமிப்பு திறனை விரிவுப்படுத்த மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து Moonlight Selfie என்ற ஃபிளாஷ் பெற்ற முன்புற 24 மெகாபிக்சல் கேமரா மிக சிறப்பான வகையில் செல்பி படங்களை பெறவும், பின்புறத்தில் 16 மெகாபிக்சல் சென்சார் பெற்ற கேமரா வாயிலாக ஸ்லோ மோஷன் வீடியோ உட்பட 64 மெகாபிக்சல் அல்ட்ரா ஹெச்டி புகைப்படங்களை பெற வழி வகுக்கின்றது.

ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளத்தை பின்பற்றிய இந்த மொபைலில் 3,225mAh பேட்டரி கொண்டு இயக்கப்பட்டு 4ஜி வோல்ட்இ ஆதரவை கொண்டதாக இயக்கப்படுகின்றது. விவோ இசட் 10 மொபைல் விலை பற்றி எந்த தகவல்ம் இல்லை.