இந்தியாவில் 500 கோடி முதலீடு செய்கிறது வோடோ மொபைல்

சீனா ஸ்மார்ட்போன் பிராண்டான வோடோ மொபைல் நிறுவனம் இந்தியாவில் 500 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 1000 கோடி ரூபாய் வருவாய் பெற திட்டமிட்டுள்ளது. வோடோ நிறுவனம் ஒன்றரை ஆண்டுகளில் இந்த முதலீட்டை செய்து முடிவு செய்துள்ளது. மேலும் 2018ல் ஆண்டின் மார்ச் மாதத்தில் 250 கோடி வருவாய் பெற்றுள்ள இந்த நிறுவனம் இந்த கால கட்டத்தில் 5-6 லட்ச ஹெட்செட்களை விற்பனை செய்துள்ளது.

வரும் 2019 ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரே மாதத்தில் 1.5 லட்ச ஹெட்செட் விற்பனை செய்து மார்க்கெட் ஷேராக 2% உயர்த்தவும்  இந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து பேசிய வோடோ தேசிய சேல்ஸ் அதிகாரி சந்தோஷ் சிங், ஒரு மாதத்திற்கு 1.5 லட்ச ஹெட்செட்களை தயாரிக்க முடியும். ஆண்டு முடிவில், சராசரியாக 5000 ரூபாய் விலையில் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து 1000 கோடி வருவாய் ஈட்ட முடிவு செய்துள்ளோம் என்றார்.

இந்தியாவில் 500 கோடி முதலீடு செய்கிறது வோடோ மொபைல்

தற்போது இந்த் நிறுவனத்தின் நான்கு ஸ்மார்ட்போன்கள், 10,000 ரூபாய் விலை கொண்ட பிரிவல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அடுத்த இரண்டு மாதங்களில் மேலும் மூன்று முதல் நான்கு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய வோடோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதில் ஒரு ஸ்மார்ட்போன்கள் ஆன்லைனிலும், மற்ற ஸ்மார்ட்போன்கள் ஆப்லைனிலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிறுவனம் சொந்தமாக சீனாவில் அசம்பிளிங் தொழிற்சாலையை கொண்டுள்ளது. மேலும் இந்தியாவின் நொய்டா, காசியாபாத் மற்றும் பாரிதாபாத் ஆகிய இடங்களில் புதிய தயாரிப்பு தொழிற்சாலையை தொடங்க திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் 500 கோடி முதலீடு செய்கிறது வோடோ மொபைல்

வோடோ நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்ய உள்ள ஸ்மார்ட்போன்கள் 5000-8000, 8000-10000 மற்றும் 10000 – 12000 ரூபாய் பிரிவுகளில் விற்பனைக்கு வர உள்ளது. இதுமட்டுமின்றி டெலிகாம் ஆபரேட்டர்களான பாரதி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ போன்ற நிறுவனங்களுடன் தங்கள் ஹெட்செட்களை மொத்தமாக விற்பனை செய்ய வோடோ நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டு வரும் வோடோ ஸ்மார்ட்போன்களுக்கு டிஸ்கவுண்ட் அளிக்க அமேசான் மற்றும் பிளிகார்ட் நிறுவனங்களுடன் பேசி வருகிறது.