மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2019 : 5ஜி, மடிக்ககூடிய ஸ்மார்ட்போன்கள் மேலும் பல

மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2019 நிகழ்வு  திங்., 25 பிப்., 2019 – வியா., 28 பிப்., 2019 வரை ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனா நகரில் நடைபெற உள்ளது. MWC 2019 அரங்கில் 5ஜி, மடிக்ககூடிய ஸ்மார்ட்போன்கள் உட்பட பல்வேறு முக்கிய விபரங்கள் வெளியாக உள்ளது.

மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2019

2019 ஆம் ஆண்டு மொபைல் போன் சார்ந்த நுட்பம் அடுத்த கட்ட நகர்வினை சந்திக்க உள்ள தொடக்கப் புள்ளியாக மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2019 நிகழ்வு அமைய உள்ளது. இந்த அரங்கில் குறிப்பாக 5ஜி ஸ்மார்ட்போன்கள், மடிக்ககூடிய ஸ்மார்ட்போன்கள், மற்றும் ஹோம் ஆட்டோமேஷன் கருவிகள் என பல்வேறு முக்கிய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

சாம்சங் : பிப்., 20ந் தேதி சான் பிரான்சிஸ்கோ நகரில், சர்வதேச அறிமுகமாக சாம்சங் கேலக்ஸி எஸ்10 மொபைல் போன்கள் வெளியிடப்படுவதுடன், மடிக்ககூடிய வகையிலான கேலக்ஸி F வரிசை தொடர்பான முக்கிய தகவல்கள் வெளியாகலாம். ஆனால் சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019-ல் ஸ்மார்ட்வாட்ச், கேலக்ஸி ஸ்போர்ட் உட்பட கேலக்ஸி ஏ சீரிஸ் தொட்பான விபரங்கள் வெளியாகலாம்.

Huawei's 5G foldable smartphone teaser at mwc 2019

ஹூவாய் : 5ஜி தயாரிப்பில் மிகுந்த தீவரமாக செயல்பட்டு வரும் ஹூவாய் நிறுவனம், தனது 5ஜி மொபைல் போன் மாடலை வெளியிட உள்ளது. மேலும் புதிய பவர்ஃபுல்லான ஹூவாய் P30, ஹூவாய் P30 ப்ரோ என இரு ஸ்மார்ட்போன்களும் வெளியிடப்படலாம்.

எல்ஜி : எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், முன்பாக வெளியிட்ட டீசரில் தொடுதிரைக்கு விடைகொடுத்து கெஸ்ட்யூர் மூலம் செயல்படுகின்ற ஸ்மார்ட்போனை வெளியிட வாய்ப்புள்ளது. எல்ஜி ஜி8 திங்க்யூ, 5ஜி மொபைல் உட்பட பல்வேறு முக்கிய தகவல்களை வெளியிட உள்ளது.

சோனி : சோனி நிறுவனம், மொபைல் வோர்ல்ட் காங்கிரஸ் 2019 நிகழ்வில் புதிய ஃபிளாக்‌ஷீப் கில்லர் மாடலான எக்ஸ்பீரியா மொபைல் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் பிராசெஸருடன் 52எம்பி கேமரா பெற்றிருக்கும்.

நோக்கியா : 5 கேமராவை பெற்ற பென்டா லென்ஸ் நோக்கியா 9 ப்யூர் வியூ ஸ்மார்ட்போன், நோக்கியா 1 பிளஸ், நோக்கியா ஃ4பீச்சர் ரக மொபைல்களை வெளியிட உள்ளது. மேலும் நோக்கியா நிறுவனத்தின் 5ஜி தொடர்பான போன் பற்றி விபரங்கள் வெளியாகலாம்.

மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2019 : 5ஜி, மடிக்ககூடிய ஸ்மார்ட்போன்கள் மேலும் பல

மோட்டோரோலா : மடிக்ககூடிய மோட்டோ ரேசர் ஸ்மார்ட்போனை கலக்கலாக லெனோவா நிறுவனம் வெளியிடலாம் என எதிஃபார்க்கப்படுகின்றது.

மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2019 : 5ஜி, மடிக்ககூடிய ஸ்மார்ட்போன்கள் மேலும் பல

ஹெச்டிசி : ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஹெச்டிசி 2018 ஆம் ஆண்டில் மொபைல் தயாரிப்பில் பெரிதாக கவனத்தை செலுத்தவில்லை. ஆனால் 2019 ஆம் ஆண்டில் புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட உள்ளது.

மைக்ரோசாஃப்ட் : 5ஜி தொடர்பான புத்தாக்க நடவடிக்கைகளை குறித்து மைக்ரோசாஃப்ட் காட்சிப்படுத்த உள்ளது. ஆனால் எந்த மாதிரியான பொருட்களை வெளியிடும் என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

ஒன்பிளஸ் : சீனாவின் பிரபலமான ஒன்பிளஸ் நிறுவனம், அடுத்து வரவுள்ள ஒன்பிளஸ் 7 மொபைல் போனின் 5ஜி தொடர்பான விபரங்கள் மற்றும் ஆண்ட்ராய்டு அடிப்படையில் இயங்கும் ஒன்பிளஸ் டிவி மாடலை வெளியிட வாய்ப்புள்ளது.

சியோமி : பிரசத்தி பெற்ற சியோமி மொபைல் போன் தயாரிப்பாளர் 5ஜி அடிப்படையிலான மி மிக்ஸ் 3 மற்றும் மடிக்ககூடிய சியோமி ஃபிளெக்ஸ் மாடலை வெளியிட உள்ளது.

மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2019 : 5ஜி, மடிக்ககூடிய ஸ்மார்ட்போன்கள் மேலும் பல

ஒப்போ : சீனாவினைச் சேர்ந்த ஒப்போ நிறுவனம் மொபைல் வோர்ல்ட் காங்கிரஸ் 2019 அரங்கில 10X ஜூம் கேமரா இடம்பெற்றிருக்கும்.

விவோ : விவோ நிறுவனம், அபேக்ஸ் கான்செப்டில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. விவோ நிறுவனத்தின் புதிய ஐகுயூ (IQoo) பிராண்டில் மடிக்ககூடிய ஸ்மார்ட்போன் வரவுள்ளது.

மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2019 : 5ஜி, மடிக்ககூடிய ஸ்மார்ட்போன்கள் மேலும் பல

ZTE நூபியா : இசட்டிஇ புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை நுபியா α என்ற பெயரில் வெளியிட வாய்ப்புள்ளது.

மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2019 : 5ஜி, மடிக்ககூடிய ஸ்மார்ட்போன்கள் மேலும் பல