வாட்ஸ்ஆப்பில் பரவும் கோல்டு வைரஸ்

வாட்ஸ்-ஆப் பயனாளர்களை குறிவைத்து பரவி வரும் கோல்டு வைரஸ் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை வைரஸ் பரப்பி திருடுவதாக புகார் எழுந்துள்ளது. வாட்ஸ்ஆப் கோல்டு என்ற பெயரில் வருகின்ற லிங்கினை கிளிக் செய்ய வேண்டாம் என வாட்ஸ்அப் குறிப்பிட்டுள்ளது.

வாட்ஸ்ஆப் கோல்டு

இன்றை மக்களின் அடிப்படை தேவையாகிப் போன ஸ்மார்ட்போன்கள் வாயிலாக பல்வேறு நல்ல பயன்களும், அதன் வாயிலாக சில கெடுதல்களும் இயல்பாகவே அமைந்து விட்டத்து. அந்த வகையில் இந்தியளவில் அதிகப்படியான மக்களால் பயன்படுத்தப்படுகின்ற மெசேஜிங் செயலியாக விளங்கும் வாட்ஸ்அப் செயிலிக்கு புதிதாக வைரஸ் பரவ தொடங்கியுள்ளது.

பயனாளர்களை மிக எளிதாக கவரும் வகையில் உலக அளவில் பிரபலங்கள் மட்டுமே பயன்படுத்தும் அப்டேட் என்ற வாசகத்துடன், வாட்ஸ்ஆப் கோல்டு என்ற அப்டேட் லிங்கை- அப்டேட் செய்தால் நாம் தனிச்சிறப்புகள் வசதிகள் போன்ற பலவற்றை வாட்ஸ்ஆப்பில் பெறமுடியும் என்ற வாசகமும் அனுப்பப்படுகிறது.

வாட்ஸ்ஆப்பில் பரவும் கோல்டு வைரஸ்

இதை நம்பி கிளிக் செய்தால் உங்கள் ஸ்மார்ட்போன் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி, உங்கள் வாட்ஸ்அப் உரையாடல்கள் உட்பட முக்கிய தகவல்கள், அந்தரங்க தகவல்கள், வங்கி கணக்கு தொடர்பான விபரங்களை இந்த வாட்ஸ் ஆப் கோல்டு வைரஸ் திருடுவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே இதுபோன்ற வாட்ஸ்-அப் லிங்குகளை தயவு செய்து கிளிக் செய்துவிடாதீர்கள் என வாட்ஸ்அப் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டில் இதுபோன்ற வைரஸ் ஒன்றை வேறு பெயரில் வெளியிட்டு பீதியை கிளப்பியுள்ளனர்.