உலக ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களின் 2017 ஆம் வருடத்தின் இரண்டாவது காலாண்டின் முடிவில் டாப் 10 இடங்களை பிடித்த ஸ்மார்ட்போன் நிறுவனங்களை பற்றி அறிவோம்.

டாப் 10 ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்

சர்வதேச ஸ்மார்ட்போன் விற்பனையில் மொத்த பங்களிப்பில் சீனா நாட்டை மையமாக கொண்டு செயல்படும் ஹூவாய், ஓப்போ, விவோ மற்றும் சியோமி போன்ற நிறுவனங்கள் மட்டுமே 48 சதவிகித பங்களிப்பை பெற்று விளங்குகின்றது.

1. சாம்சங்

உலகின் முதன்மையான ஸ்மார்ட்போன் தயாரிப்பாளராக விளங்கும் சாம்சங் நிறுவனம் 22 சதவிகித பங்களிப்பை பெற்றதாக விளங்குகின்றது.

2. ஆப்பிள்

முந்தைய ஆண்டுடன் ஒப்பீடுகையில் 0.1 சதவிகித வீழ்ச்சி அடைந்துள்ள ஆப்பிள் விற்பனை சரிந்திருந்தாலும் இந்த காலாண்டு வருடத்தில் 11.2 சதவிகித பங்களிப்பை பெற்றுள்ளது.

3.ஹூவாய்

சீனாவை மையமாக கொண்டு செயல்படும் ஹூவாய் நிறுவனம் 20 சதவிகித வளர்ச்சி பெற்று மூன்றாவது இடத்தில் உள்ள இந்நிறுவனம் இந்த வருடத்தின் இரண்டாவது காலாண்டில் பெற்று 38.4 மில்லியன் ஸ்மார்ட்போன்களை டெலிவரி செய்துள்ளது.

4. ஓப்போ

சர்வதேச அளவில் நான்காவது இடத்தில் உள்ள ஓப்போ சீனா மற்றும் இந்தியாவில் அபரிதமான சந்தையை பெற்றுள்ளது. குறிப்பாக முந்தைய வருடத்தின் காலாண்டுடன் ஒப்பீடுகையில் தனது தாயகத்தில் 33 சதவிகித வளர்ச்சி பெற்றிருப்பதுடன் 8.4 சதவிகித சந்தை பங்களிப்பை Q2 ,2017ல் பெற்றுள்ளது.

5. விவோ

5வது இடத்தில் உள்ள இந்திய சந்தையில் மிக வேகமாக வளர்ந்து வருகின்ற பிராண்டுகளில் சீனாவின் விவோ மிக முக்கியமானதாகும். முந்தைய வருடத்தின் காலாண்டுடன் ஒப்பீடுகையில் தனது தாயகத்தில் 45 சதவிகித வளர்ச்சி பெற்றிருப்பதுடன் 6.6 சதவிகித சந்தை பங்களிப்பை பெற்று சியோமி நிறுவனத்துக்கு இணையான சந்தையை கொண்டுள்ளது.

6. சியோமி

உலகின் மிக வேகமாக வளரும் ஸ்மார்ட்போன் பிராண்டாக விளங்கும் சீனாவை மையமாக கொண்டு செயல்படும் சியோமி நிறுவனம் முந்தைய வருடத்தின் காலாண்டுடன் ஒப்பீடுகையில் தனது தாயகத்தில் 60 சதவிகித வளர்ச்சி பெற்றிருப்பதுடன் 6.6 சதவிகித சந்தை பங்களிப்பை இந்த வருடத்தின் இரண்டாவது காலாண்டில் பெற்று 23.2 மில்லியன் ஸ்மார்ட்போன்களை டெலிவரி செய்துள்ளது.

7.எல்ஜி

வடஅமெரிக்க பகுதிகளில் 4 சதவிகித சந்தையை எல்ஜி இழந்திருந்தாலும், ஆசியா மற்றும் ஐரோப்பா கண்டங்களில் அபரிதமான வளர்ச்சி முன்னெடுத்துள்ள நிலையில் இந்த வருடத்தின் இரண்டாவது காலாண்டில் 13.3 மில்லியன் ஸ்மார்ட்போன்களை டெலிவரி செய்துள்ளது.

8. ZTE

இசட்டிஇ குழுமத்தின் கீழ் செயல்படும் மொத்த பிராண்டுகளின் பங்களிப்பு Q2, 2017 காலாண்டில் 3.3 பங்களிப்பினை பெற்றுள்ளது.

9. லெனோவா

9வது இடத்தில் உள்ள லெனொவா நிறுவனத்துடன் மோட்டோரோலோ பிராண்டும் இணைந்து சர்வதேச அளவில் 3.2 சதவிகித பங்களிப்பினை பெற்றுள்ளது. இது கடந்த கடந்த வருடத்தின் காலாண்டுடன் ஒப்பீடுகையில்  பெரிய அளவில் மாற்றங்கள் இல்லை.

10. அல்காடெல்

சர்வதேச அளவில் 10வது இடத்தை பிடித்துள்ள அல்காடெல் கடந்த வருடத்தின் காலாண்டுடன் ஒப்பீடுகையில் 0.8 சதவிகித அளவில் வீழ்ச்சி அடைந்து 1.3 சதவிகித பங்களிப்பினை பெற்றுள்ளது.