உலகின் டாப் 10 ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் 2018

உலகின் சிறந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் யார் ? 2018 ஆம் வருடத்தின் உலகின் டாப் 10 ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தொடர்பான ஆய்வறிக்கையை கவுன்டர்பாயின்ட் வெளியிட்டுள்ளது. அதிக ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில் சீன மொபைல் போன் தயாரிப்பாளர்களின் ஆதிக்கமே உள்ளது.

சாம்சங்

முதலிடத்தில் இடம்பெற்றுள்ள தென் கொரியாவின் சாம்சங் மொபைல் போன் நிறுவனம், மிகப்பெரிய சரிவினை 2018 ஆம் ஆண்டில் சந்தித்துள்ளது. முந்தைய வருடத்துடன் ஒப்பீடுகையில் 8 சதவீத வீழ்ச்சி அடைந்து, 2018 ஆம் வருட முடிவில் 19 சதவீத சந்தை பங்களிப்பை சர்வதேச அளவில் பெற்று விளங்குகின்றது.

உலகின் டாப் 10 ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் 2018

ஆப்பிள்

அமெரிக்காவைச் சேர்ந்த உலகின் மிகவும் சக்திவாய்ந்த ஆப்பிள் நிறுவனம், 2018-ல் முந்தைய வருடத்துடன் ஒப்பீடுகையில் 4 சதவீத விற்பனை சரிவை சந்தித்துள்ளது. 14 சதவீத பங்களிப்புடன் உலகின் இரண்டாவது மிகப்பெரிய மொபைல் தயாரிப்பாளராக விளங்குகின்றது.

Apple inc. logo

ஹூவாய்

ஆப்பிள் நிறுவனத்துக்கு இணையான சந்தையை பெற்றுள்ள சீனாவின் ஹூவாய் நிறுவனம் 14 சதவீத பங்களிப்பை பெற்றுள்ளது. முந்தைய வருடத்துடன் ஒப்பீடுகையில் 36 சதவீத வளர்ச்சியை இந்நிறுவனம் பெற்றுள்ளது.

உலகின் டாப் 10 ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் 2018

சியோமி

2018-ல் உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் பட்டியலில், முந்தைய வருடத்துடன் ஒப்பீடுகையில் 26 சதவீத வளர்ச்சியை பெற்ற இந்நிறுவனம் சர்வதேச அளவில் 8 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. சீனாவின் சியோமி நிறுவனம் இந்தியாவின் முதன்மையான ஸ்மார்ட்போன் தயாரிப்பாளராக விளங்கும் நிலையில் உலகயளவில் 4வது இடத்தில் உள்ளது.

உலகின் டாப் 10 ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் 2018

ஒப்போ

சீனாவின் ஒப்போ நிறுவனம், உலகின் டாப் 10 ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் 8 சதவீத பங்களிப்பை சர்வதேச அளவில் கொண்டுள்ளது. இந்த பட்டியலில் 5 வது இடத்தை பெற்றுள்ளது.

உலகின் டாப் 10 ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் 2018

விவோ

மற்றொரு சீன நிறுவனமான விவோ ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர், விற்பனை 3 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. 2018-ல் 7 சதவீதம் சர்வதேச சந்தையை பெற்று உலகின் டாப் 10 ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் 2018 பட்டியலில் 6 வது இடத்தில் உள்ளது.

உலகின் டாப் 10 ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் 2018

எல்ஜி

தென்கொரியாவின் எல்ஜி எலக்ட்ரானிக்ஸ், முந்தைய வருடத்துடன் ஒப்பீடுகையில் விற்பனை 26 சதவீதம் சரிவடைந்துள்ளது. 2018-ல் 3 சதவீதம் சர்வதேச சந்தையை பெற்று உலகின் டாப் 10 ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் 2018 பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.

உலகின் டாப் 10 ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் 2018

லெனோவா

சீனாவின் லெனோவா நிறுவனம் மற்றும் அதன் கீழ் செயல்படும் மோட்டோரோலா நிறுவனத்தின் கூட்டு விற்பனை 23 சதவீதம் சரிவடைந்துள்ளது. 2018-ல் 3 சதவீதம் சந்தையை பெற்றள்ளது.

உலகின் டாப் 10 ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் 2018

நோக்கியா

ஃபின்லாந்து நாட்டின் பிரபலமான நோக்கியா பிராண்டு 9 வது இடத்தை பெற்று ஹெச்எம்டி குளோபல் 126 சதவீத வளர்ச்சியை 2018-ல் பதிவு செய்துள்ளது. மொத்த சர்வதேச ஸ்மார்ட்போன் விற்பனையில் 1 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது.

உலகின் டாப் 10 ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் 2018

டெக்னோ

சீனாவின் டெக்னோ மொபைல் போன் தயாரிப்பாளரான, 1 சதவீத பங்களிப்பை பெற்று 10வது இடத்தில் உள்ளது. முந்தைய வருடத்துடன் ஒப்பீடுகையில் இந்நிறுவனம் 32 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

உலகின் டாப் 10 ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் 2018